states

பீகாரில் இடஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்கிறது

பீகார், நவ.7- பீகாரில், பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தப்படும்; உயர்சாதியினருக் கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் சேர்த்து ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 75 சதவீதமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை சட்டமன்றத்தில் நிதிஷ் குமார் செவ்வாயன்று வெளி யிட்டார். அப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  மாநிலத்தில் பட்டியல் சாதியினர்  20 சதவீதம், பட்டியல் பழங்குடியினர் 2  சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 43 சதவீதம், உயர்சாதி யினர் 10சதவீதம் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.