states

img

கத்தியைக் காட்டினால் வழிப்பறி, ரெய்டு நடத்தினால் நிதி!

ஆசியாவின் மிகப்பெரிய டெனிம்  உற்பத்தியாளர் நிறுவனங்க ளில் ஒன்று சிரிபால் இண்டஸ்ட்ரீஸ். அகமதாபாத்தைச் சேர்ந்த இந்த குழு மம் பேக்கேஜிங் துறையிலும், கல்வித் துறையிலும் நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது.  2019-20இல் பாஜகவிற்கு ரூ. 2.25 கோடி நிதியளித்த இந்த குழு மம், அடுத்த இரண்டு ஆண்டிகளுக்கு  நிதியளிக்கவில்லை. 2022 ஜூலை யில் இதற்குச் சொந்தமான இடங்க ளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.10 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அவ்வாண்டில், ரூ.2.61 நிதியை பாஜகவிற்கு இந்த நிறுவனம் அளித்தது.