இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை துவங்கும் ஹவுதி
செங்கடல் பகுதியில் பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை துவங்குவதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் நங்கள் தாக்குதலை துவங்குவோம் என ஹவுதி அமைப்பு எச்சரித்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில் மீண்டும் தாக்குதலை துவங்குவதாக அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா ஆதரவு கட்சி கிரீன்லாந்து தேர்தலில் வெற்றி
கிரீன்லாந்து தேர்தலில் மத்திய-வலது ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி அமெரிக்க ஆதரவு கட்சி என கூறப்படுகின்றது. எனினும் அக்கட்சியின் தலைவர் ஜென்ஸ் ஃபிரடெரிக் நீல்சன் கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பேசி வருகின்றார்.
ஒப்பந்தத்தை மீறிய தாக்குதல் 137 பாலஸ்தீனர்கள் படுகொலை
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தால் 137 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் பலமுறை தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் செய்தி அலுவலக தலைவர் சலாமா மரூஃப் இந்த தகவலை தெரிவித்தார்.இதில் ரஃபா நகரில் மட்டும் சுமார் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிவேக குவாண்டம் கணினி கண்டுபிடிப்பில் சாதித்த சீனா
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தால் 137 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் பலமுறை தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் செய்தி அலுவலக தலைவர் சலாமா மரூஃப் இந்த தகவலை தெரிவித்தார்.இதில் ரஃபா நகரில் மட்டும் சுமார் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிவேக குவாண்டம் கணினி கண்டுபிடிப்பில் சாதித்த சீனா
சீன விஞ்ஞானிகள் ஜுசோஞ்ழி- 3 என்ற ஒரு புதிய சூப்பர் குவாண்டம் கணினியை கண்டுபிடித்துள்ளனர். இது புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (USTC) ஆராய்ச்சியாளர்கள், குவாண்டம் கணினி தற்போது இருக்கும் கூகுள் நிறுவனத்தின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை விட கால் ரில்லியன் (25 ஆயிரம் கோடி) மடங்கு வேகத்தில் இயங்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்க பொருட்களுக்கு வரி
ஏப்ரல் மாதம் முதல் 28 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதிக்க உள்ளோம் என ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது. ஐரோப்பவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமி னியம் மீது வரிகளை 25 சதவீதமாக அமெரிக்கா அதிகரித்ததை தொடர்ந்து ஐரோப்பாவும் வரிகளை அறிவித்துள்ளது. மேலும் இதனை சுமூகமாக கொண்டுசெலவதற்காக அமெரிக்கா வுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஐரோப்பிய ஒன்றி யம் தெரிவிதுள்ளது.
உலகளவில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்த இரண்டாவது நாடு இந்தியா
உலகளவில் அதிகளவு ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் முதல்நாடான உக்ரைனுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது என ஸ்டாக்ஹோம் இன்டர்நே ஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) வெளி யிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. 2024 கணக்கெடுப்பின் படி உலகளாவிய ஆயுத இறக்குமதியில் சுமார் 8.3 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. சில ஆண்டு காலமாககவே இந்தியா ஆயுத இறக்குமதியில் முதல் இடத்தில் உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் துவங்கிய பிறகு 2020 மற்றும் 2024 க்கு இடையில் அதிக ஆயுதங்க ளை இறக்குமதி செய்து உக்ரைன் முதல் இடத்திற்கு வந்துள்ளது. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் சுமார் 8.8 சதவீதம் வரை உக்ரைன் செய்துள்ளது. 2015-2019 மற்றும் 2020-2024 க்கு இடை யில், இந்தியாவின் ஆயுத இறக்குமதி 9.3% குறைந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்தி திறன்கள் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு கொள்முதல் கொள்கைகளின் ஏற்ப்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணம் என ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆயுத உற்பத்தியில் முன்னேற்றம் இருந்தபோ திலும், இந்தியா அதிக ஆயுதங்களை வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது என அவ்வறிக்கை சுட்டிக்கடியுள்ளது.
இந்தியா அதிகளவு ரஷ்யாவின் ஆயுதங்களை இறக்குமதி செய்கின்றது எனவும் அவ்வறிக்கை கட்டியுள்ளது. ரஷ்ய மட்டுமின்றி பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் இருந்து உளவு சாதனங்கள், மென்பொருட்கள் போர் விமானங்க ளை இந்தியா அதிகமாக வாங்கி வருகின்றது. 2024 உலகளாவிய ஆயுத இறக்குமதியில் உக்ரைன், இந்தியா, கத்தார், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளும் 35 சதவீதம் ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன. 2010-2014 வரை ரஷ்யாவிடம் இருந்து மட்டும் 72 சதவீதம் வரை ஆயுதங்களை இந்தியா இறக்கு மதி செய்தது. பின்னர் 2015-2019 க்கு இடையில் 55 சதவீதமாகவும் 2020-2024 இல் 36-38% ஆகக் குறைந்தது. இதே நேரத்தில் பிரான்ஸ், தென்கொரியா, தென்னாப்ரிக்கா , இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியலில் ஏற்பட்டு வந்த மோசமான சூழல் காரணமாக ரஷ்யாவை மட்டுமே நம்பாமல் ஆயுதங்களை பல நாடுகளிடமும் இருந்து வாங்கி கொள்ள இந்தியா முடிவெடுத்த காரணமாகவே ரஷ்யாவிடம் கொள்முதல் குறைந்துள்ளது என அவ்வறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்பில் இந்தியா முன்னேறி, ஏற்றுமதி ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டாலும், உலக அளவில் முதல் 25 ஆயுத ஏற்று மதியாளர்களின் பட்டியலில் இந்தியா இன்னும் நுழையவில்லை.