states

வியட்நாமில் “ஆப்பிள்” முதலீடு

ஹோசிமின் சிட்டி, ஆக. 17- கொரோனா பெருந்தொற்றி லிருந்து விடுதலை கிடைத்த பிறகு வியட்நாமில் மீண்டும் தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனாவுக்கு முன்பாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக  முதலீடுகளை ஈர்க்கும் நாடாக வியட்நாம் உருவெடுத்தது. இரண்டா ண்டுகள் முதலீடுகள் குறைந்தாலும், மக்கள் மீது எந்தவித பாதிப்பும் இல்லா மல் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான அரசு பார்த்துக் கொண்டது. இப்போது மீண்டும் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. முதன்முறை யாக ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்களை வியட்நாமில்  உற்பத்தி  செய்யப் போகிறது. கைக்கடிகாரங் கள் மற்றும்  சிறிய அளவிலான கணினி களைத் தயாரிக்கும் தொழிற்சாலை களை அமைக்கப் போகிறார்கள். சீனாவிற்கு அடுத்தபடியாக, வியட்நாமில்தான் நிறைய உற்பத்திப் பிரிவுகளை ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே வைத்திருந்தது. ஆப்பிள்  கைக்கடிகாரங்கள் மிகவும் உயர்ந்த  தொழில்நுட்பத்தோடு தயாரிக்கப்படு வதால், அவை வியட்நாமுக்குக் கிடைக்கப் போவதை முக்கியமான நிகழ்வாகப் பார்க்கிறார்கள். தனது  தொழில்நுட்பப் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஏற்கனவே இருக்கும் வியட்நாம், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் போகிறது. கூகுள், டெல் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைப் பிரிவுகளை விரிவு படுத்தவும், புதிய பிரிவுகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே பல நிறுவனங்களும் ஐபேட் உள்ளிட்ட பல்வேறு உயர் தொழில் நுட்பங்கள் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. பல  நிறுவனங்களுக்கும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உயர் தொழில் நுட்பம் கூடிய தொழிற்சாலைகளை அமைக்க வியட்நாம்தான் பொருத்த மானது என்ற ஆலோசனை வந்துள்ளது.

;