states

img

விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு

புதுதில்லி, நவ.27- தில்லியில் திங்களன்று நடத்த விருந்த டிராக்டர் பேரணி, நடைபய ணத்தை ஒத்திவைப்பதாக விவ சாயிகள் சங்கங்கள் அறிவித்துள் ளன. இது குறித்து அனைத்துவிவ சாயிகள் கூட்டமைப்பின் தலைவர் (எஸ்கேஎம்) தலைவர் தர்ஷன் பால் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாங்கள் திங்கள்கிழமை நாடா ளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த டிராக்டர் பேரணி, நடைபயணத்தை ஒத்திவைத்துள்ளோம்.  விவசாயி கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், உயிரிழந்த விவ சாயிகளுக்கு நினைவிடம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்று பிர தமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.  லக்கிம்பூர் கெரி போராட்டத் தின் போது நடைபெற்ற வன்முறை மற்றும் பிற பிரச்சனைகள் தொடர் பாக மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ரா- வை இடை நீக்கம் செய்வது  குறித்த பதிலுக்காக காத்திருக்கிறோம்,

டிசம்பர்-4ஆம் தேதி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு  (எஸ்கேஎம்)  கூட்டத்தை கூட்டியுள் ளோம் என்றார். மேலும் ஒன்றிய அரசு விவசாயி களை பேச்சுவார்த்தைக்கு அழைக் கும்போது உரிய கௌரவத்துடன் நடத்த வேண்டுமெனவும் தர்ஷன் பால் வலியுறுத்தினார். கடந்த வாரம், மூன்று விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர்  மோடி அறிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளார். விவசாயிகள் சங்கங்கள் இதை வரவேற்றிருந்தாலும், சட்டத்தை  முழுமையாகவும் முறையாகவும் திரும்பப் பெறப்படவேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு புதிய சட்டம் உள்ளிட்ட பிற கோரிக் கைகள் நிறைவேறும் வரை தங்கள்  போராட்டம் தொடரும் என்றும் விவ சாயிகள் கூறியுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

;