states

img

ஜெய் ஜவான், ஜெய் கிசான்!

புதுதில்லி, அக்.18- லக்கிம்பூர் கெரி விவசாயிகள் படு கொலைக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜி னாமா செய்ய வலியுறுத்தி நாடு முழு வதும் திங்களன்று (அக். 18) விவ சாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3ஆம் தேதி உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கெரிக்கு ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத்  மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய விவசாயிகள் மீது அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றியும், சுட்டும் 4 பேரைப் படுகொலை செய்தார். இந்த சம்பவங்களில் மொத்தம் 8 பேர் பலியாகினர்.  இந்த விவகாரத்தில் உத்தரப்பிர தேச காவல்துறையினர் அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இதில் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலி யுறுத்தி திங்களன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. பஞ்சாபில் லூதியானா, அமிர்த சரஸ், ஜலந்தர், மோகா, பாட்டி யாலா மற்றும் பெரோஸ்பூர் மற்றும்  ஹரியானாவின் சர்கி தாத்ரி, சோனிபட், குருக்ஷேத்ரா, ஜிந்த், கர்னல் மற்றும் ஹிசார் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடை பெற்றன. ஏராளமான பெண்கள்  கலந்து கொண்டனர். போராட்டக் காரர்கள் பாஜக தலைமையிலான அர சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி னர். அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தினர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் திங்கள்கிழமை அதிகாலை 5.15 மணிக்கே விவசாயிகள் போராட்ட த்தைத் தொடங்கினர். பெரோஸ்பூர் நகரில் உள்ள பெரோஸ்பூர்-பாசில்கா பிரிவு மற்றும் மோகாவில் உள்ள அஜித்வாலில் உள்ள பெரோஸ்பூர்-லூதியானா பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். அமிர்தசரஸ் தேவி தாஸ்புரா கிராமத்தில் விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சண்டிகர் செல்லும் பயணிகள் ரயில் எஸ்ஏஎஸ் நகர் மாவட்டத்தில் தேரா பஸ்ஸி தெஹ்சிலில் உள்ள  தப்பர் நிலையத்தில் ரயில் நிறுத்தப் பட்டது.  தில்லி-ரோதக், தில்லி- அம்பாலா வழித் தடங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பர பரப்பான லூதியானா ரயில் நிலை யத்தில் நின்றிருந்த பயணி ஒருவர், “அரசியல்வாதிகளின் வீடுகளை விவசாயிகள் முற்றுகையிட வேண்டும். அப்போது தான் அவர்கள் பொதுமக்களைப் பற்றி சிந்திப்பார்கள்” என்றார். பதிந்தா-ரேவாரி சிறப்பு ரயில் மற்றும் சிர்சா-லூதியானா சிறப்பு ரயில் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது,

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மோகாவில் நிறுத்தப்பட்ட ரயிலுக்கு முன்னால் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்று எழுதப்பட்ட ஒரு  பேனரை போராட்டக் குழுவினர் வைத்தனர். லக்கிம்பூர் வன்முறை யில் கொல்லப்பட்ட நான்கு விவ சாயிகளின் புகைப்படங்களையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். வடமேற்கு ரயில்வே  மண்டலத்தில் ராஜஸ்தான்,  ஹரியானாவில் சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 13 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டது.  வடமேற்கு ரயில்வே மண்டல செய்தித்  தொடர்பாளர் கூறுகையில், பிவானி-ரேவாரி, சிர்சா-ரேவாரி, லோஹரு-ஹிசார்,  சூரத்கர்-பாடிந்தா, சிர்சா-பதிந்தா, ஹனு மங்கர்-பதிந்தா, ரோஹ்தக்-பிவானி, ரேவரி-சாதுல்பூர், ஹிசார்-பதிந்தா, ஹனுமங்கர்-கங்கூர்-சாத்பூர் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஹரியானா மாநிலம் பஹதூர்கர், சஹ்னேவால் மற்றும் ராஜ்புரா அருகே விவ சாயிகள் ரயில் தண்டவாளத்தை மறித்து  போராட்டம் நடத்தியதால்  புதுதில்லி-அமிர்தசரஸ் சதாப்தி எக்ஸ்பிரஸ் நிறுத்தப் பட்டது. வடக்கு ரயில்வே மண்டலத்தில் 130  இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

;