states

img

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது கொரோனாவை தடுக்க 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்அடிப்படையில் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பவேக்சை பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைத்தொர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்து உள்ளது.

 

;