states

அசாமில் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, செப்.24-  அசாம் மாநிலத்தில் விவசாயிகள் மீதான காவல்துறை யினர் நடத்திய  கொடூரமான தாக்குதல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: அசாம் மாநிலத்தில் தாரங் மாவட்டத்தில் தோல்பூர்-கோருகுட்டி பகுதியில் மாநில அரசின் கட்டளைக் கிணங்க மாநிலக் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதற்கும் பலர் காயம் அடைந்துள்ளதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரி வித்துக் கொள்கிறது. அரசாங்கத்தின் நிலத்திலிருந்து “சந்தேகத்திற்குரிய சட்டவிரோத வெளியாட்களை அப்பு றப்படுத்துகிறோம்” என்ற பெயரில் அசாம் மாநில அர சாங்கம், பல பத்தாண்டுகளாக தங்கள் நிலங்களில் விவசா யம் செய்துவரும் இந்தியக் குடிமக்கள், ஏழை விவசாயிகள் மீது  வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டி ருக்கிறது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் மதவெறி அடிப்படையில் திட்டமிடப்பட்டு, உள்ளூர் முஸ்லிம்  சிறு பான்மையினருக்கு எதிராகக் குறிவைத்து ஏவப்பட்டிருக்கி றது.

இது அனைத்துக் குடிமக்களுக் கும் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகிய வற்றின் மீது ஏவப்பட்டுள்ள அப்பட்டமான தாக்குதலா கும்.   விவசாயிகள் மீது ஏவப்பட்டுள்ள கொடூரமான தாக்கு தல்கள் புகைப்படங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் காணப்படும் காவல்துறையினர் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பணியில் உள்ள கவு காத்தி உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையின் கீழ் விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இவ்வாறு விவசாயி கள் வெளியேற்றப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தி னருக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.  மேலும், அசாமில் பாஜக அரசாங்கத்தின் மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், அவற்றைத் தோலு ரித்துக் காட்டும் விதத்திலும் போராடிக்கொண்டிருக்கும் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் முயற்சிகளை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  (ந.நி.)

;