புதுதில்லி,மே 6- “என்னிடம் மட்டும் மல்லிகார்ஜூன கார்கேவின் செல்போன் எண் இருந்தால் அவர், மனைவி, அவரது குழந்தைகளை கொன்று விடுவேன்” என சித்தபுரா தொகுதி பாஜக வேட்பா ளர் மணிகண்ட ரதோட் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின்தலைவரான மல்லி கார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்வ தற்கு பாஜக தீட்டியுள்ள சதித்திட்டம் வெளிச்சத் திற்கு வந்துள்ளதாக காங்கி ரஸ் குற்றம் சாட்டியுள்ளது.