states

img

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

அமலாக்கத்துறை இயக்குநரகத் தின் அதிதீவிர விசாரணை பிரிவு (HIU) நாடு முழுவதும் செயல் படும் மிகப்பெரிய சைபர் கிரைம் நெட் வொர்க்குடன் தொ டர்புடையதாகக் கரு தப்படுபவர்களைக் குறிவைத்து வியாழக் கிழமை மீண்டும் சோதனையைத் தொ டங்கியது. தனிநபரின் தகவல்களைத் திரட்டி மோசடியில் ஈடுபடுதல், “க்யூ.ஆர்.குறியீடு (Quick Response code) மோசடி மற்றும் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக மோசடி உட்பட ஆயிரக்கணக்கான இணையவழி குற்றங்களின் மூலம் திரட்டப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடந்தன. இந்நிலையில், தில்லியின் பிஜ்வா சன் பகுதியில் அசோக் சர்மா என்பவ ரிடம் அமலாக்கத்துறையின் இயக்கு நர் குழு சோதனை நடத்திக்கொண்டி ருந்த பொழுது, 5 பேர் கொண்ட கும்பல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்கு தலை சாதகமாக பயன்படுத்தி அசோக் சர்மா சோதனை நடைபெற்ற வளாகத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற வளாகம் தில்லி போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இந்த சம்பவத்தில் அம லாக்கத்துறையின் கூடுதல் இயக்குநர் ஒருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.