states

சிலிண்டர் விலை மேலும் ரூ.101 அதிகரிப்பு

புதுதில்லி,டிச.1- வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.101  அதிகரித்து 2,234 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற் கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  உயர்த்தப்பட்டது. தற்போது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப் பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை ரூ.101  அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை யாகிறது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன் பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  ஓராண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது குறிப் பிடத்தக்கது. சென்னையில் 19 கிலோ  எடைகொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந் திருக்கிறது. இதனால் ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை அதி கரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு அவதிப்படும் மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றி வருகிறது.விலையை குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.

;