states

img

திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்......

அகர்தலா:
திரிபுரா மாநில முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார், பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார்.

 காரல் மார்க்ஸின் பிறந்த நாளான மே 5 அன்று சங் பரிவார் அமைப்பினர் சிபிஎம் ஊழியர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். சாந்தி பஜாரில் தாக்குதலுக்குள்ளான வீடுகளை திங்களன்று மாணிக்சர்க்கார் பார்க்கச் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.திரிபுரா மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான மாணிக் சர்க்கார், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாதல் சவுத்ரி ஆகியோர் திங்களன்று சாந்தி பஜார் சென்றனர். அப்போது கம்புகள்மற்றும் கற்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மாணிக் சர்க்கரை நோக்கி பாஜக சங் பரிவார் குண்டர்கள் பாய்ந்து செல்வதையும் தாக்குதல் நடத்துவதையும் மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள காணொலியில் காண முடிகிறது. காவல்துறையினர் மாணிக்சர்க்காரையும் சிபிஎம் ஊழியர்களையும் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு திரிபுராவில் சாந்திபஜார் பகுதியில் மாணிக் சர்க்கார், பாஜக குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. திரிபுரா காவல்துறையினரும், நிர்வாகமும் அனுமதி அளித்த நிகழ்வில் பங்கேற்ற சமயத்தில் மாணிக்சர்க்கார் மற்றும் எதிர்க்கட்சிக் குழுவினர் தாக்கப்பட்டிருக்கின்றனர்.முன்னதாக அங்கே தாக்குதலுக்கு உள்ளான கட்சித் தலைவர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்களின் இல்லங்களுக்கு அவர்கள் செல்ல முயன்றபோது அவர்களைத் தடுத்து, தாக்கியிருக்கின்றனர்.பாஜக,  திரிபுராவில் எதிர்க்கட்சி யினரின் ஜனநாயகபூர்வமான நடவடிக்கை எதையும் அனுமதிப்ப தில்லை. இதனை ஏற்க முடியாது.இதுபோன்ற நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும், இவற்றுக்கு எதிராக எதிர்வினையாற்றப்படும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (ந.நி.)

;