states

img

உத்தரகண்ட் நிலச்சரிவு : 25 பேர் பலி

டேராடூன், அக். 19 - உத்தரகண்டில் பெய்து வரும்  கனமழையால் உருவான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகண்டின் சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவ தால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரி ழந்துள்ளனர். மாநிலத்தின் பிற பகுதி களில் இருந்து நைனிடால் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.  மேகமூட்டம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி  டேராடூனில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- உத்தரகண்ட் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.  மாநிலத்தில் நடைபெற்று வரும்  நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கை களுக்கு உதவ மூன்று இராணுவ ஹெலிகாப்டர்கள் விரைவில் வரும் என்று மாநில முதல்வர் தாமி உறுதியளித்தார்.   கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு செய்த உத்தரகண்ட் முதல்வர் தாமி,  ருத்ர பிரயாகை சென்றடைந்த பின் சேத மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தினார்.  

நைனிடாலில் உள்ள மால் சாலை, நைனி ஏரியின் கரையில் அமைந்துள்ள நைனா தேவி கோவில்  ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவு காரணமாக ஒரு விடுதிக் கட்டடம் சேதமடைந்துள்ளது. நகரில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் முயற்சித்துவருகிறது. நைனிடால் மாவட்டம் முக்தேஷ்வர் டிகிரி கல்லூரி அருகே சுவர் இடிந்து விழுந்த தில் ஐந்து தொழிலாளர்கள் பலியாயினர்.  ஒரு தொழிலாளி பத்திரமாக மீட்கப் பட்டார். அல்மோரா மாவட்டத்தின் பெட்ரோஜ்கான் பகுதியில் உள்ள ராபாட் கிராமத்தில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த  ஒரு பெண் பத்திரமாக மீட்கப்பட்டார் ராம்நகர்-ராணிகேத் வழித்தடத்தில் எலுமிச்சை மரம் ரிசார்ட்டில்  கோசி ஆற்றின் தண்ணீர் புகுந்ததையடுத்து அங்கிருந்த 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடைவிடாத மழை காரணமாக இது வரை 24 முதல் 25 பேர்  வரை இறந்துள்ள னர். நைனிடால் மாவட்டத்தில் அதிக உயி ரிழப்பு நிகழ்ந்துள்ளது என  டிஜிபி அசோக் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உத்தரகண்டில் உள்ள சர்தாமிற்கு யாத்திரையாக 60 பேர் முதல் 100 பேர் வரை  சென்றுள்ளனர். அவர்களில் ஆறு பேர் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்தில் சிக்கியுள்ளனர். கனமழை காரணமாக ஹெலிகாப்டர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது,  ஜோஷிமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிலர் சிக்கியுள்ளனர்.

;