states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. ஜம்மு-காஷ்மீர் விவ காரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின்படி இந் தியாவுடன் நியாயமான மற்றும் அமைதியான முறையில் தீர்வுகாண விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறி யுள்ளார்.
  2. தமிழ்நாடு அரசு 24  மணி நேரமும் கடைகளில்  வியாபாரம் செய்யலாம் என அரசாணை பிறப் பித்த பிறகு, கடைகளை இரவு நேரத்தில் மூட, வேண்டும் என்று போலீ சார் வியாபாரிகளை நிர்பந் திக்க முடியாது; சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏதா வது ஏற்பட்டால் மட்டுமே தலையிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  3. அமெரிக்காவில் நிரந்தர மாக குடியேற இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, அவரது மனைவி லோமா ராஜபக்சே ஆகியோர் கிரீன் கார்டு கோரி விண் ணப்பித்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள் ளன. கோத்தபய ராஜ பக்சே தற்போது தாய் லாந்து நாட்டின் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
  4. தமிழ்நாடு முழுதும் இது வரை 37.81 லட்சம் (6.08%) பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். இவர்களில் 90% பேர்  வாக்குச்சாவடி அலுவலர் வழியாக பதிவு செய்துள் ளனர். மீதம் 10% பேர் ஆன்லைன் வழியாக பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக அரிய லுார், பெரம்பலுார், விரு துநகர் மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் அதிக மானோர் ஆதார் எண் களை வழங்கி உள்ளனர் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரி வித்துள்ளார்.
  5. மோசமான வானிலை கார ணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலி காப்டர் கயாவில் அவசர மாக தரையிறக்கப் பட்டது. மாநிலத்தில் வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய நிதிஷ் குமார் மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டார்.
  6. ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தொடர் விடு முறை நாட்களில், தனி யார் ஆம்னி பஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வில் கூடுதல் கட்டணம் வசூலித்த 953 பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு ரூ. 11.04 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தக வல் தெரிவித்துள்ளார்.
  7. கேரளா மாநிலம் வயநாட் டில் கடந்த மாதம் ராகுல் காந்தி எம்.பி.யின், அலு வலகத்தில் இருந்த மகாத்மா காந்தி படத்தை அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்  என கல் பெட்டா காவல்துறை தகவல் வெளியிட்டுள் ளது. 
  8. ஆப்பிரிக்க நாடான மாலியில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ள பிரான்ஸ், தீவிரவாதிகளுக்குத் தாங்கள் உதவி செய்ததாக வரும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. 9 ஆண்டுகள் கழித்து, தற்போது மாலியில் ஆட்சியில் உள்ள ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தங்கள் படைகளை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக் கொண்டது. தங்களை மீறி நாட்டின் வான்வெளியில் மீறல்களை பிரான்ஸ் மேற்கொண்டது என்றும் தற்போது மாலி குற்றம் சாட்டியுள்ளது.
  9. அல்ஜீரியாவின் காடுகளில் ஏற்பட்டுள்ள கடும் நெருப்புக்குக் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் காமெல் பெல்ட்ஜோட் கூறியுள்ளார். மேலும் பலர் காயமடைந்தும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துனீசியாவின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள அல்ஜீரியக் காடுகளில் பெரும் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 
  10. தெற்கு ஏமனில் சந்தேகப்படும்படியாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டுப் படைகள் இயங்குகின்றன என்று ஏமன் அரசு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து இந்தப் பகுதியைக் குறிவைத்து தான் சவூதி அரேபியா தலைமையிலான படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வரும் அமெரிக்காவும், பிரான்சும் நேரடியாகவே தெற்கு ஏமனில் செயல்படுவதாக ஏமன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இந்தப் படைகள் நடமாடுவதாகவும் தெரிவித்துள்ளது.
;