states

சிகிச்சையில் இருப்போர் சதவீதம் மிகக் குறைவு

புதுதில்லி, செப்.20- இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.   இதுகுறித்து ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளி யிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு ள்ளதாவது: ஒரேநாளில் கொரோனாவால் புதி தாக 30 ஆயிரத்து 256 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த மாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  3 லட்சத்து 18 ஆயிரத்து 181 ஆகக் குறைந்துள்ளது.  மேலும், 13 ஆயிரத்து 977 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.95 சதவீதமாகக் குறைந்துள் ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.72  ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வால் 295 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 45 ஆயி ரத்து 133 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 55 கோடியே 36 லட்சத்து 21 ஆயிரத்து 766 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஒரே நாளில் 11 லட்சத்து 77 ஆயிரத்து 607மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை  ஏறக்குறைய 80.85 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;