states

வீடுகளில் கொடியேற்றச் சொல்லி திசை திருப்பல்: மோடியின் மோசடியை அம்பலப்படுத்திய சலீம்

கொல்கத்தா, ஆக.14- நாட்டில் மத நல்லிணக்கத்தை பாது காக்க காந்தி எடுத்த உறுதிமொழியை இடதுசாரிகள் நினைவுகூர்ந்து இந்தி  யாவின்75 ஆவது சுதந்திர  விழாவை  நாடு முழுவதும் இன்று கொண்டாடுகிறார்கள். இதனொரு பகுதியாக கொல்கத்தா வில் காந்தி தங்கியிருந்த  பெலியாகட்டா வீட்டின் முன் 14 இடதுசாரி மற்றும் கூட்ட ணிக் கட்சிகள் சார்பில் மூவர்ணக் கொடி ஏற்றப்படுகிறது. காந்தி தங்கியிருந்த வீட்டின் முன்  14 இடதுசாரிக் கட்சி மற்றும் கூட்டணிக்  கட்சிகள் கொடியேற்றுவதன் முக்கியத்து வம் குறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்குவங்க மாநிலச் செயலாளர்  முகமது சலீம் ஞாயிறன்று கூறியதாவது: கொல்கத்தா, நவகாளி போன்ற இடங்களில் கலவரம் வெடித்தது. மகாத்மா தில்லியில் நடைபெறும்  ஆடம்ப ரம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்து, அமைதி யை மீட்டெடுக்க கொல்கத்தா வந்தார்.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி  காந்தி ஹைதேரி  மஞ்சில் என்று அழைக்கப்படும் சிறிய கட்டடத்திற்கு வந்தார்.  பின்னர்  இந்த கட்டடம் காந்தி பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  காந்தி 73 மணி நேரம்  உண்ணாவிரதம் இருந்ததால் இந்துக் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அமைதி நிலவியது. இன்றைக்கு நாட்டில் அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்து வத்தைப் பேண நாம் போராட வேண்டிய  சூழ்நிலை உள்ளது.  “மத  நல்லி ணக்கத்தை நோக்கி”  என்ற முழக்கத்து டன் மூவர்ணக் கொடியை ஏற்றுகிறோம் என்றார். ‘பிரதமர்  மோடியின் “ஹர் கர் திரங்கா” பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த சலீம், 2022-ஆம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்  என்று மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றத்  தவறிவிட்டார். இதை மறைப்பதற்காக ஒவ்வொரு வரையும் வீடுகளில் கொடியேற்றச் சொல்லி மக்களின் எதிர்பார்ப்பை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றார்.

;