states

பாஜகவோடு கூட்டணி இல்லை என அறிவிக்கத் தயாரா?

“ உங்களின் கட்சியை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொண்டு வருகிறீர்கள். அப்படி என்றால் வரும் நாட்களில் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்கு பின்னரோ பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அறிவிக்க முடியுமா?” என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமிக்கு, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். மேலும், “அவ்வாறு அறிவித்துவிட்டால் உங்கள் கட்சிக்கு உள்ள ‘பாஜக-வின் பி டீம்’ என்ற களங்கம் நீங்கிவிடும்” என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.