தூங்கா நகரமாம் மாமதுரை மாநகரம்,
தூங்குது பார் எய்ம்ஸ் மருத்துவமனை.
கும்பகர்ணனை கூட எழுப்பும் மாமதுரை
எழுப்ப முடியல பத்து வருசமா மோடியை
மீண்டும் மோடி! வேண்டாம் மோடி!!
ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்க்கு
நாட்டில் வேலை என்றார்.
கோடி கோடியாய் இளைஞர் கூட்டம்
தெருக்கோடியில் நிற்கும் அவலம்
மீண்டும் மோடி! வேண்டாம் மோடி!!
வங்கிக் கணக்கில் நாளை வரவாகும்
15லட்சம் ரூபாய் என்றார்.
வட்டி, வாசிக்கு கடனை வாங்கி
வயித்த வாயக்கட்டி கணக்கு துவங்கினோம்
வருசம் பத்தாச்சு லட்சம் என்னாச்சு
மீண்டும் மோடி! வேண்டாம் மோடி!!
மண்ணெண்ணெய்க்கும், சுள்ளிக்கும் கொள்ளிவைத்து
மானியவிலை கேஸ் உருளை அறிவிப்பு
வீடுதோறும் பெண்கள் கேஸ் புழங்க
காணாமல் போச்சு கேஸ் மானியம்
வங்கிக் கணக்கில் ஏறியதோ சூனியம்
மீண்டும் மோடி! வேண்டாம் மோடி!!
விமானி இல்லாமல் கூட வெளிநாடு செல்வார்
அதானி இல்லாமல் செல்லமாட்டார் மோடி
வாயால் சுட்டுப் போட்ட வடைகள்.
வயிற்று பசிக்காரனுக்கு புசிக்க உதவாது
உங்க பொம்மலாட்டம் செல்லாது
மீண்டும் மோடி! வேண்டாம் மோடி!!