உதகமண்டலம்,மே 21- நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்று மதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உதகை நகரின் 200-வது ஆண்டு விழா சனிக்கிழமை (மே 21) உதகையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.118.79 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்நிய களை தாவரங்களை அகற்றும் பணிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும். சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கப்படும்" என்றார்.