states

img

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்

நெல்லை,ஆக.18- தமிழறிஞர் நெல்லை கண்ணன் (77) அவர்கள் ஆகஸ்ட் 18 வியாழக்கிழமையன்று கால மானார்.  சிறந்த பேச்சாளரும், பட்டி மன்ற நடுவருமான தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட நெல்லை  கண்ணன்  1970 ஆம் ஆண்டு முதல் பல் வேறு மேடைகளில் தமிழ்ச்சொற்பொழி களை  ஆற்றியவர்.  முன்னாள் முதல்வர் காம ராஜர் தொடங்கி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவருடனும் நட்புறவில் இருந்தவர். தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதை அண்மையில் பெற்றிருந்தார் . குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவர். 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் உள்ள அவருடைய வீட்டில் ஆகஸ்ட் 18 அன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  பாற்கடல் போல் தமிழில் பொங்கு பவர் தமிழ்க்கடக் நெல்லை கண்ணன்.  சமகாலத்தின் தமிழ்க்கடல் வற்றிவிட்டது என்றே கருதுகிறேன்.  சமகால சமூகத்திற்கு தமிழ் உணர்வை ஊட்டிக் கொண்டே இருந்தவர் நெல்லை கண்ணன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள் ளார். நெல்லை கண்ணனின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு; இனிமேல் இத்தகைய மனிதரைக் காண்பது அரிதானது என்று  சாலமன் பாப்பையா இரங்கலை தெரி வித்துள்ளார். நெல்லை கண்ணன் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழுக்கும் மாபெரும் இழப்பு; நெல்லை கண்ணனின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் பலநாள் நிலைத் திருக்கும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள் ளார்.

சிபிஎம் இரங்கல்

தமிழ்க்கடல் நெல்லை  கண்ணன் மறை வுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:  தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளருமான தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த  புலமை கொண்ட நெல்லைக் கண்ணன் அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக  இலக்கிய மேடைகளில் சொற்பொழிவாள ராகவும், பட்டிமன்ற நடுவராகவும் திகழ்ந்தவர். இடதுசாரி இயக்கங்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த நெல்லை கண்ணன்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய  பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றவர்.  இடதுசாரி கட்சி வேட்பாளர்களை ஆத ரித்து தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் தன்னார்வத்துடன் ஈடுபட்டவர். தமிழக அரசு  சமீபத்தில் இவருக்கு இளங்கோ அடிகள்  விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருது  உட்பட பல விருதுகளை பெற்ற அவரது  மறைவு தமிழ் இலக் கிய உலகிற்கு பேரி ழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது  குடும்பத்தாருக்கு கட்சியின் சார்பில் ஆறு தலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ் வாறு அதில் கூறியுள்ளார். நெல்லை கண்ணன் மறைவுக்கு சிபிஎம் திருநெல்வேலி மாவட்டக் குழு தனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரி வித்துள்ளது.
 

;