states

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை பூ மார்க்கெட் விலை நிலவரம்

மதுரை, ஆக.8- மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை நிலவரம்:  மல்லி 1 கிலோ ரூ, 500 முதல் 600 , பிச்சி  1 கிலோ ரூ 500, 1 கிலோ முல்லை ரூ. 400,  சென்டு மல்லி  1 கிலோ ரூ. 80, பட்டன் ரோஸ் 1 கிலோ ரூ.150,  பட்ரோஸ்  1 கிலோ ரூ. 100, சம்பங்கி 1 கிலோ ரூ. 180, அரலி 1கிலோ  ரூ. 180 இதர பூக்களின் விலை திங்களன்று சற்று அதிக ரித்துள்ளது.


இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி

விருதுநகர், ஆக.8- விருதுநகர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் போத்திராசு ( 42). இவர் திருநெல்வேலி செல்வதற்காக சாத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையில் சென்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் போத்திராசும், சாலையில் சென்ற நபரும் படுகாயம் அடைந்தனர். இதில் போத்திராசு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரி ழந்தார். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து,  சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மின் கட்டண உயர்வு குறித்து  ஆக.18 இல் மக்களிடம் கருத்துக்கேட்பு  

மதுரை, ஆக.8- தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குறை ஆணையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மது ரையில் வருகிற  18-ஆம் தேதி தல்லாகுளம் லட்சுமி  சுந்தரம் அரங்கில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறு கிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அங்கு பதிவு செய்யலாம். பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுக்கும்.

வாகனம் மோதி ஓட்டுநர் பலி

மதுரை, ஆக.8- மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ஆனை குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி  மகன் கார்த்திக் (18)வேன் ஓட்டுநர்.  இவர் திங்களன்று காலை ஆனை குளத்தில் இருந்து சமயநல்லூர் நோக்கி இருசக்கர வாக னத்தில் சென்றுள்ளார். சமயநல்லூரை அடுத்துள்ள கட்ட புலி நகர் அருகே சென்றபோது  பின்னால் வந்த அடையா ளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி யதில் தூக்கி எறியப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக சமய நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 டன் ரேசன் அரிசி பறிமுதல்

மதுரை, ஆக.8-  மதுரை மாவட்டம் திருமங்கலம் - விமான நிலைய சாலையில் உள்ள விடத்தகுளம் சாலையில் ரேசன் அரிசி யை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்டி அதிக  விலைக்கு விற்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. கீழக்கோட்டையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 3டன் ரேசன் அரிசி பிடிபட்டது. அந்த  பரபரப்பு அடங்குவதற்குள் இரவு விடத்தகுளம் சாலை யில் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து அங்கு சென்ற திருமங்கலம் கோட்டாட்சியர்  தலை மையில் வட்டாட்சியர்  மற்றும் அதிகாரிகள் சரக்கு வேனை சோதனையிட்டனர். இதனால் சரக்கு வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வேனில்  ரேசன் அரிசி 50 கிலோ எடை உள்ள 80 மூடைகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை  4 டன் ஆகும்.  வட்டாட்சியர்  ரேசன் அரிசி மற்றும் சரக்கு  வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த வாகனம் திருமங்க லம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்  பட்டது.

சிறைவாசி தற்கொலை முயற்சி

மதுரை, ஆக.8- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வட காட்டுப்பட்டியை சேர்ந்த சின்னராஜ் மகன் ஆரோக்கி யசாமி இவர்  தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று  மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார். இவர திங்களன்று  காலை  இவர்  தனக்குத் தானே  பிளேடால் கழுத்தில் கிழித்து கொண்டிருந்தபோது பார்த்த  மற்ற சிறைவாசிகள் மற்றும் சிறைக்காவலர்கள் ஆரோக்கி யசாமியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீப்பிடித்து எரிந்த மினி வேன் 

மதுரை, ஆக.8- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூக்காரத் தெரு வைச் சேர்ந்தவர் அருண் குமார்(24). இவர் ஞாயிறன்று இரவு 7 .30 மணியளவில் வாடிப்பட்டியில் இருந்து மினி  வேனில் அலங்காநல்லூருக்கு ஆட்களை ஏற்றிக் சென்று  கொண்டிருந்தார். அதில் 8 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் வாடிப்பட்டி மயானம் அருகில் சென்ற போது திடீரென்று மினிவேனில்ஆயில் பெல்ட் அறுந்து தீப்பிடித்தாக கூறப்படுகிறது.  உடனே அதைக் கண்ட  அசோக்குமார் மினி வேனை நிறுத்திவிட்டு பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கி விட்டார். அதற்குள் தீ  மளமளவென்று எரியத் துவங்கியது. இந்த தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயை அனைத்தனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சதுரகிரி செல்ல அனுமதி இல்லை

திருவில்லிபுத்தூர், ஆக.8- கனமழை காரணமாக சதுரகிரி செல்வதற்கு பக்தர் களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை இருப்பதாக வானிலை மையத்தினால் அறி விக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பை கருதி 9.8.2022 முதல் 12.8.2022 வரையிலான சதுரகிரி கோவிலுக்கு பொதுமக்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மறியல்

மதுரை, ஆக.8- மதுரை சோலையழகுபுரம் பகுதியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள வழித்தட பாதை யை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகில் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் காவல்துறை அதி காரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கி ரமிப்பை அகற்றுவதாக உறுதியளித்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தவர்களின் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வழித்தடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி  மக்கள் நடந்து செல்வதற்கு  வழி செய்யப்பட்டது. தொடர்ந்து அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குடிசைமாற்று வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி  ஆக்கிரமிப்புகள் அகற் றப்படும் என உறுதியளித்தனர்.

கடன் தள்ளுபடி ரசீது வழங்கவில்லை முற்றுகையின் போது உறுதியளித்தும் விவசாயிகளை தவிக்க விடும் அதிகாரிகள்

கடமலைக்குண்டு, ஆக.8- தேனி மாவட்டம் வருஷநாடு தொடக்க  வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2020ம் ஆண்டு  800 பயனாளிகளுக்கு நகை  மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப் பட்டது.  தற்போது வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ரசீது  வழங்கவில்லை. தள்ளுபடி செய்ததற்கான ரசீது வழங்கக் கோரி விவசாயிகள் இரண்டு  வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி  வரு கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் நகைக்  கடன் தள்ளுபடி ரசீது வழங்க வலியுறுத்தி விவசாயிகள் வருஷநாடு கூட்டுறவு சங் கத்தை முற்றுகையிட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ரசீது  வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றனர். ஆனால்  நடவடிக்கை எடுக்கவில்லை. ரசீது கிடைக்காததால் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் நகை மற்றும் பயிர் கடன்கள் பெற முடியவில்லை. இதற்கிடையே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளில் ஒரு சிலருக்கு மட்டும்  கூட்டுறவு அதிகாரிகள் ரசீது வழங்கி யுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்ற னர். இப்படி ரசீது வழங்கப்பட்டதற்கு “பணம்” காரணம் என்கின்றனர் விவசாயிகள் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுத்து கடன் தள்ளுபடி செய்யப் பட்ட பயனாளிகள் அனைவருக்கும் ரசீது வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டுநர்  கொலை வழக்கில் 6 பேர் கைது  தேனி அருகே  உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

தேனி, ஆக.8-  தேனி அருகே பூதிப்புரத்தில் வீட்ட ருகே குப்பை கொட்டிய பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், அதே ஊரைச் சேர்ந்த  கார் ஓட்டுநரை அடித்துக் கொலை செய்  யப்பட்ட சம்பவத்தில் 6 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். பூதிப்புரம், கோட்டைமேட்டுத் தெரு வைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் ராதாகிருஷ்ணன்(40). இவரது வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த ஊர்காவலன் என்பவர் குப்பைகளை கொட்டி எரித்தா ராம். இதை ராதாகிருஷ்ணன் கண்டித்துள் ளார். அப்போது அவர் ஊர்காவலனை சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சுருளிமுத்து வின் மகன், கார் ஓட்டுநரான மகேஸ்வர குமார்(55) என்பவர், இந்தப் பிரச்சனையில்  ஏன் ஜாதியை குறிப்பிட்டு திட்டுகிறாய் என்று ராதாகிருஷ்ணனுடன் வாக்கு வாதம் செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், மகேஸ்வரகுமாரை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த பெரியகருப்பன் , செல்வம், தினேஷ், நல்லுசாமி ,சதீஸ் ஆகியோரும் மகேஸ்வரகுமாரை சூழ்ந்து கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மகேஸ்வரகுமார், இந்த தாக்கு தலை தடுக்கச் சென்ற அவரது சகோதரர்  நாகராஜ், உறவினர் திலகவதி ஆகியோர்  காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர். இதில், மகேஸ்வரகுமார் வழியிலேயே உயிரிழந்தார். இந்த தகவ லறிந்து அங்கு சென்ற பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். மறியல் இந்த சம்பவத்தையடுத்து, ராதா கிருஷ்ணனுடன் சேர்ந்து மகேஸ்வர குமாரை தாக்கிய அனைவரையும் கைது  செய்யக் கோரி, பூதிப்புரம் பெருமாள் கோயில் அருகே பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர்.  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனை வரையும் கைது செய்யக்கோரி, இரண்டாம் நாளாக திங்களன்று புதிப்புரத்தில், கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே  தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே தனிப்படையினர் வழக்கில் தொடர்புடைய பெரியகருப்பன், நல்லு சாமி, செல்வம், தினேஷ், சதீஸ் ஆகி யோரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மகேஸ்வர குமாரின் உடலை பெற்று புதிப்புரத்தில் அடக்கம் செய்தனர். சிபிஎம் வலியுறுத்தல் கொல்லப்பட்டவரின் குடும்பத்தின ருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் இ. தர்மர் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கறிஞர் சங்க  இராமநாதபுரம் மாவட்ட மாநாடு  

இராமநாதபுரம், ஆக.8- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்  இராம நாதபுரம் மாவட்ட மாநாடு  ஞாயிறன்று இராமநாத புரத்தில் எஸ்.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்  றது.  இந்த மாநாட்டில்   மாவட்டத் தலைவராக எஸ்.கே.ஜி.விக்ரமன்,  மாவட்டச் செயலாளராக சந்திர சேகரன், மாவட்டப் பொருளாளராக டி.மாரிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர்களாக தனபால், சலீம்,  மாவட்டத் துணைச் செயலாளராக ஜெயமுருகன், நாகேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மாநிலப் பொதுச் செயலாளர் முத்து அமுத நாதன், மாநிலச் செயலாளர் மதி ஆகியோர் பேசினர்.

இரு சக்கர வாகனம் மாயம்

அருப்புக்கோட்டை, ஆக.8- அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் சோலைராஜா(31). இவர், தனது இரு சக்கர வாகனத்தில் அருப்புக்  கோட்டைக்கு சென்றுள்ளார். பின்பு, அங்குள்ள பெரிய பள்ளிவாசல் பகுதியில் நிறுத்தி விட்டு, வேலைக்கு சென்றாராம். திரும்பி வந்து பார்த்த போது, இரு சக்கர  வாகனத்தை காணவில்லை. எனவே, அவர் அருப்புக்கோட்டை நகர் காவல்  நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வாக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

1.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்:  3 பேர் கைது

காரியாபட்டி, ஆக.8- காரியாபட்டி பகுதியில் ரேசன் அரிசி கடத்திச் செல்லப்  படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,  மல்லாங்கிணறு அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாக னத்தை மடக்கி சோதனையிட்டதில்,  தலா 40 கிலோ எடையுள்ள 39 பைகளில்  1560 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. மேற்படி கடத்தலில் ஈடுபட்ட, மதுரை மாவட்டம், முனிச்சாலைப் பகுதியைச் சேர்ந்த விஜயன்(30), மேல அனுப்பானடியைச் சேர்ந்த தனசேகர்(22) மற்றும் தன பால்(20) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், கடத்த லுக்கு பயன்படுத்தப்பட்ட  வாகனம் மற்றும் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.   அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொது மக்களிடம் ரேசன் அரிசியை விலைக்கு வாங்கி கள்ளச்  சந்தையில் அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது.  

சாதியை சொல்லி கொலை மிரட்டல்  ஒப்பந்ததாரர் மீது ஊராட்சி தலைவர் புகார்

தேனி, ஆக.8- சாதியை சொல்லி, கொலை மிரட்டல் விடுப்பதாக ஒப்பந்ததாரர் மீது க.மயிலாடும்பாறை ஒன்றியம், ஆத்தங்கரைப் பட்டி  ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, தேனி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். க.மயிலாடும்பாறை ஒன்றியம் ,ஆத்தங்கரைப் பட்டி  ஊராட்சி தலைவர் பழனிச்சாமி அளித்துள்ள புகாரில், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் ,ஆத்தங்கரைப் பட்டி  ஊராட்சி சர்வே எண் 633 முதல் 961வரை உள்ள  நிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தின் கீழ் 3 முறை நீர்முழ்கி குளம் அமைக்கும் பணி  நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது ஆத்தங்கரைப் பட்டி  ஊராட்சிக்குட்பட்ட இந்த குளத்தின் அருகே   கண்ட மனூர் ஊராட்சி மூலம் ஒப்பந்ததாரர் வினோத்குமார் என்ப வர் தடுப்பணை கட்டி வருவதாகவும் ,அது தரமில்லா மல் உள்ளது. இது தொடர்பாக எங்கள் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் பணி செய்ய வேண்டாம், தரமில்லாமல் உள்ளது என கூறியதற்கு சாதியின் பெயரை சொல்லி இழிவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.







 

 

;