states

தீண்டாமை ஒழிப்பு முன்னணி - மாதர் சங்கம் வரவேற்பு

கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு:

சென்னை,செப்.24- கடலூர் கண்ணகி - முருகேசன் சாதி ஆணவப் படுகொலை வழக்கில்   ஒருவருக்கு தூக்குத் தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடலூர் சிறப்பு நீதிமன்றம்  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி இத்தீர்ப்பை வரவேற்பதோடு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இவ் வழக்கில் பெரும் பங்களிப்பு செய்த மூத்த வழக்கறிஞர் பொ.ரத்திணம் அவர்களுக்கு பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கி றோம் என்று கூறியுள்ளார். மாதர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர லாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தலித் அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சாதிய ஆணவப் படுகொலை செய்யும் சாதி வெறியர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இது போன்ற சாதிய ஆணவ படுகொலை வழக்குக ளில் காலதாமதம் இல்லாமல் குறுகிய காலத் திற்குள் தீர்ப்பு  வழங்க வேண்டும்.. சாதி ஆண வப்படுகொலையை தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரி வித்துள்ளனர்.
 

;