states

10 ஆண்டுகளில் தொழிற்துறை உற்பத்தி படுதோல்வி

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் தொழிற் துறை உற்பத்தி வீழ்ச்சியை அடைந்துள்ள தாகவும், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் படுதோல்வி அடைந்த திட்டம் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். தொழில் உற்பத்தித் துறைக்காக பெருமுழக்கத்து டன் மோடி அரசு அறிவித்த திட்டங்கள் முற்றிலும் செயலற்றுவிட்டன. 10 ஆண்டுகளில் இந்திய ஜிடிபியில் தொழில் உற்பத்தித் துறையின் பங்கு 16 சதவிகி தத்திலிருந்து 13 சதவிகிதமாக சரிந்தது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் 7.85 சதவிகிதமாக இருந்த தொழில் உற்பத்தித் துறை சராசரி வளர்ச்சி, மோடி ஆட்சியில் 6 சதவிகித மாக சரிந்தது ஏன்?. 2022-க்குள் தொழில் உற்பத்தித் துறையில் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் என மோடி வாக்குறுதி தந்தாரே?.. எங்கே அந்த வேலைவாய்ப்புகள்?. இந்தியாவின் தொழில் உற்பத்தித் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் சரிந்தது ஏன்?. பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டங்கள் தோல்வி அடைந்தது ஏன்?. ஒன்றிய அரசின் முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப் பட்ட நிதி முழுமையாக செலவிடப்படாதது ஏன்?. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் (பிஎல்ஐ) ஜவுளித் துறைக்கு ஒதுக்கிய நிதியில் 96 சதவிகிதம் செலவிடாதது ஏன்?. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு பிஎல்ஐ திட்டத்தின் கீழ் எந்த நிதியும் ஒதுக்கப்படாதது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் 549 சதவிகிதமாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி விகிதம், மோடி ஆட்சியில் 90 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது ஏன்?  இவ்வாறு பிரதமர் மோடிக்கு, கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.