states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காமன்வெல்த் பேட்மிண் டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசி யாவின் ஷே யெங்கை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதே போல டேபிள் டென்னிஸ் பிரிவில் தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப் படுகிறது; இனி அரசுப் பணியாளர் தேர்வா ணையம் இப்பணி நியம னத்தை மேற்கொள்ளும் எனவும், விண்ணப்பிக்க இதழியல் பாடம் படித் திருப்பது அவசியம் எனவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

பீகாரில் ஜனாதிபதி ஆட்சிக்கான சாத்தியக் கூறுகள் எதையும் நாங் கள் இப்போது உணர வில்லை. முதலில் என்ன நடக்கும் என்பதை கவ னிக்க வேண்டும். அதன் பிறகு பீகார் மக்களின் வழி காட்டுதலின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப் போம் என ஆர்ஜேடி மாநி லங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா கூறியுள்ளார்.

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்தமானது ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள், விவசாயி களை கடுமையாக பாதிக்கும். இதனால், ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது தெரிந்தே ஒன்றிய அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. மின்விநி யோகத்துக்கான அரசின் கட்டமைப்புகளை தனி யாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என தமி ழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரி வித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அரசு விதி முறைகளுக்கு மாறாக நிலத்தை விற்பனை செய்தவர்களின் பட்டி யலை அயோத்தியா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், பாஜக எம்.எல்.ஏ., அயோத்தியா மேயர் பிர காஷ் குப்தா உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ள னர். 

இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பால் கொட் டிய கனமழை, வெள்ளப் பெருக்கால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் பெய்த அதி  கனமழையால் மலைக் கிராமங்கள் வெள்ளக் காடாகின. 

நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரப்பிர தேச மாநிலம் சஹரான்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி நசுங்கிப் போன 27 வயது இளைஞரின் முழங்கை யை எய்ம்ஸ் மருத்துவ மனை மருத்துவர்கள் மீள் உருவாக்கம் செய்து சாதனை படைத்துள்ள னர். 

தனது 29ஆவது மாநாட்டை தள்ளிப் போட ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநாடு ஜனவரி 2023 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டியிருந்தது. நாடு தழுவிய உள்ளாட்சித் தேர்தல் நடப்பதாலும், அதில் முழு கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் ஓராண்டுக்கு மாநாட்டைத் தள்ளிப் போடுவதாக அறிவித்துள்ளார்கள். ஏப்ரல் 2023இல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு சூழல் ஒன்று உருவாகியிருப்பதால்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி கசுவோ கட்சியின் செயற்குழு முன்பாக வைத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடான செனகலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. செனகல் தேசிய அவையில் மொத்தம் 165 இடங்கள் உள்ளன. 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 125 இடங்களைப் பெற்ற ஆளும்கட்சி தற்போது 82 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், பல இடங்களில் வாக்குகள் திரும்பவும் எண்ணப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. எதிர்க்கட்சிகள் 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சில சிறிய கட்சிகளின் சார்பில் மூன்று பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அமைச்சரவையை உருவாக்குவதில் இவர்கள் முக்கியமான பாத்திரத்தை வகிப்பார்கள்.

சவூதி அரேபியாவுடனான போர் நிறுத்த உடன்பாடு பலனளிக்கவில்லை என்றால், அதை நீட்டிக்க மாட்டோம் என்று ஏமன் அரசு தெரிவித்துள்ளது. தனது பொம்மை அரசை ஏமன் மீது திணிப்பதற்காக சவூதி அரேபியா, தனது கூட்டாளிகளை இணைத்துக் கொண்டு ஏமன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் தற்போது போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை உடன்பாடு செய்யப்பட்டபோது, அதை மீறி சவூதி அரேபியா தாக்குதல்களை நடத்தியது. இந்த முறை அப்படி நடந்தால், போர் நிறுத்த உடன்பாட்டை நீட்டிக்க மாட்டோம் என்று ஏமன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

;