states

கிரையோஜெனிக் இன்ஜின் : சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் காவல் கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண் வெளிக்கு ராக்கெட்டுகளுக் கான இன்ஜின் களை சோதனை செய்து ஆய்வு நடத்தி அனுப் பும் பரிசோதனை நடத்தப் பட்டு வருகிறது. சி.இ 20 எனப்படும். இன்ஜின் வாயி லாக 50 வினாடிகள், 720 வினா டிகள், 100 வினாடிகள் என ஏற்கனவே 9 கட்டமாக பரி சோதனை நடத்தப்பட்டுள் ளது. அதன்படி ஆயிரத்து 880 வினாடி கள் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள் ளப்பட்டது என்பது குறிப்பி டத்தக்கதாகும்.இதைத் தொடர்ந்து 10ம் கட்ட பரிசோ தனை 760 வினாடிகள் நடத்தப் பட்டது. பரிசோத னையை இயக்குனர் அழகுவேல்,  இணை இயக்குனர் ஆசீர் பாக்கிய ராஜ் மற்றும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தினர். காணொளி காட்சி வாயிலாக பரிசோதனையை பார்த்த  இதர விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், காவல் கிணறு இஸ்ரோ விஞ்ஞானிக ளுக்கு பாராட்டு தெரிவித்த னர்.