சென்னை,நவ.24- தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகை யிலைப் பொருட்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவ ராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கைப்பற்றினர். அப்போது தமிழக அமைச்சர்கள், ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிக ளுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த ஊழல் சர்ச்சையில் சிக்கினர். இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் கடந்தாண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் கள் மற்றும் காவல்துறை உயரதி காரிகள் அதில் இடம்பெறாத நிலை யில் சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்தி ரன், ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு தமிழக அரசு கடந்த ஜூலையில் அனுமதி வழங்கியது. அதன்படி 11 பேருக்கு எதிராக சிபிஐ போலீஸார் கூடுதல் குற்றப்பத்திரிகையை சென்னை 8-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி.மலர் வாலண்டினா முன்பாக தாக்கல் செய்தனர். ஆனால், அதில் பல்வேறு குறைகள் இருந்ததால், அதை திருத்தம் செய்து முறையாக தாக்கல் செய்ய சிபிஐ போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 15-க்கு தள்ளி வைத்துள்ளார்.