states

தபால் துறையை தனியார்மயமாக்குவதா? ஆக.10 வேலைநிறுத்தத்திற்கு சிஐடியு ஆதரவு

சென்னை, ஆக.9- அரசின் சேவைத்துறைகளில் ஒன்றான  தபால்துறை நாட்டின் ஒரு முனையி லிருந்து மற்றொரு முனையில் உள்ள குக்கிராமங்களுக்கும் மிக குறைந்த கட்ட ணத்தில் தபால் சேவை, பண பரிமாற்றம், சிறு சேமிப்பு என பல்வகை பணிகளை செய்து வருகிறது. இந்தத் துறையையும் ஒன்றிய மோடி அரசு விட்டுவைக்க விரும்ப வில்லை.  ஏற்கனவே பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா, பாதுகாப்பு உற்பத்தி நிறு வனங்கள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களையும், வங்கி, காப்பீடு நிதி போன்ற நிறுவனங்களையும் தனியார் மயமாக்கிய மோடி அரசு தபால்  துறையிலும் கார்ப்பரேட்டுக்கள், தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த அனு மதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. “தொழில் செய்வது அரசின் வேலை யில்லை” என்று ஆட்சியாளர்கள் கூறு கிறார்கள். இதன் பொருள் பொதுத்துறை நிறுவனங்களால் தொழில் வளர்ச்சி, பொரு ளாதார உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் சமூகநீதி காப்பது போன்ற அரும் பணிகளை மோடி அரசு புறந்தள்ளுகிறது. நாட்டின் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் நிதியை ஊக்குவிப்பு என்ற பெயரில் இந்திய பெருமுதலாளி களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வாரிக் கொடுக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.  தபால் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து, இத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் ஓரணியில் நின்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட வுள்ளன. நாட்டின் சொத்தையும், பாமர மக்க ளுக்கு பெரும் சேவை புரியும் தபால் துறை யையும், பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வா தாரத்தையும் பாதுகாக்க நடைபெறும் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.போராடும் தபால் துறை ஊழியர்களுக்கான ஆதரவு நடவடிக்கையில் ஈடுபடுமாறு சிஐ டியு அமைப்புகளை சங்கத்தின் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;