சென்னை, ஏப்.20- சாக்லெட் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹாங்காங்கைச் சேர்ந்த யூ ஃபுட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளது. தென்னிந்தியச் சந்தையில் யோலி யோலா எனும் பிராண்டின் பெயரில் வாயில் எச்சில் ஊறவைக்கும் சிறந்த மிட்டாய் தயாரிப்புகளின் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் வேகமாக வளர்ச்சிபெறும் சாக்லெட் சந்தையில் நுழைவதற்கும், இப்பிரிவில் ஒரு பெரிய பங்கைப் பெறுவதற்கும் இந் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான அத்வைத் பிரதான் கூறினார். ஸ்ட்ராபெரி, லிச்சி, கொய்யா, பச்சை மாங்காய், எலுமிச்சை, புதினா, அல்போன்சா மாம்பழம் உள்ளிட்ட சுவைகளில் புதிய சாக்லெட்டுகளை இங்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.