states

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

புதுதில்லி,அக்.20-  ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் தீபாவளி  போனசாக  வழங்கப்படும் என்ற  அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.   2021 மார்ச் 31 ஆம் தேதி வரை பணியில் இருந்த மற்றும் 2020-21 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் மற்றும்  போனஸ் பெறுவதற்கான கணக்கீட்டு உச்சவரம்பு மாதாந்திர  ஊதியம் ரூ.7 ஆயிரமாக இருக்க வேண்டும் என்றும்  குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை வெளியிட்டுள்ள நிபந்தனைகள் குறித்த அறிக்கையில், மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும்  ஆயுதப் படைகளின் ஊழியர்களும் போனசுக்கு தகுதியுடை யவர்கள்.  மார்ச் 31, 2021 வரை பணியில் இருந்த மற்றும்  2020-21 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சி யாக பணியாற்றி இருந்திருந்தால் அவர்கள் தற்காலிக போனசுக்கு தகுதி பெறுவார்கள். இந்த போனஸ் தொகையானது உற்பத்தி-அல்லாத இணைக்கப்பட்ட போனஸ் (Ad-hoc போனஸ்) திட்டத்தின் கீழ் வராத குழு-சி மற்றும் குழு-பி. யில் உள்ள அனைத்து கெஜெட்டட் அல்லாத ஊழியர்களுக்கும் வழங்கப்படும். தற்காலிக போனஸின் குவாண்டம் சராசரி ஊதியங்கள்/அதிகபட்ச கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும். மார்ச் 31, 2021-க்கு முன் ராஜினாமா செய்த, ஓய்வு பெற்ற அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அல்லது  அதற்கு முன் மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்றவர் களுக்கு மட்டுமே தற்காலிக போனஸ் வழங்கப்படும். இந்த  சந்தர்ப்பங்களில் கூட, வருடத்தில் குறைந்தது ஆறு மாதங்கள்  வழக்கமாக பணியாற்றி ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;