states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. உத்தரபிரதேசத்தில் உள்ள உன்னாவ் வழக்கில் பாஜக எம் எல்ஏவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வும், அதே மாநிலத்தில் ஹத்ராஸ் வழக்கிலும் பாலியல் குற்றவாளி களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல் பட்டது. ஜம்மு-காஷ்மீரில் கதுவா வழக்கில் பாலியல் குற்ற வாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து இப்போது குஜராத்திலும் பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கிரிமினல் களுக்கு பாஜக ஆதரவு அளிப்பது, பெண்கள் மீதான பாஜக கட்சியின் உண்மையான மன நிலையை காட்டுகிறது. இதுபோன்ற அரசியலை செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா பிரதமர் ஜி? என டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்திசாடியுள் ளார்.
  2. அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதி லளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த் துறை க்கு நோட்டீஸ் அனுப்ப  தலைமை நீதிபதி ரமணா  அமர்வு உத்தர விட்டுள்ளது. 
  3. மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறி முதல் செய்யப்பட்டுள் ளன. 
  4. குஜராத் இனப்படு கொலையின் பொழுது பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் 2 பாஜக எம்எல்ஏ-க்கள் இருந்துள்ளனர். இது கைதிகளை விடுவிக்க பரிந்துரைத்தது நடு நிலையான, பாரபட்ச மற்ற சட்ட நிபுணர்களை கொண்ட குழுவா என  குஜராத் மற்றும் ஒன்றிய பாஜக அரசிற்கு காங்கி ரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
  5. “ஜம்மு-காஷ்மீரில் உள் ளூர் அல்லாதவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தேர்தல் ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்க ப்பட்ட கடைசி ஆணி” என ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆவேசமாக சாடி யுள்ளார்.
  6. தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்ட தாக 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக வும், அவற்றில் 7 சேனல் கள் இந்தியாவை சேர்ந்த வை என்றும், ஒரு சேனல் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சம் அறி க்கை வெளியிட்டுள்ளது.
  7. பிரபல மலையாள நடிகர் நெடும்பராம் கோபி (85)  வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலமானார்.
  8. 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு கனடா நாட்டின் ஹாலி பேக்ஸ் நகரில் வரும் 22 முதல்  26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சபாநாயகர் மு.அப்பாவு, சட்டபேரவைச் செயலாளர் கி.சீனி வாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
  9. நாட்டையே உலுக்கிய மேற்கு வங்க மாநிலத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு ஊழல் விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மோண்டலின் மகள் சுகன்யா மோண்டல் தனது டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது சம்பந்தமாக நடைபெறும் அனைத்து விசாரணைகளுக்கும் அவரது முழுமதிப்பெண் பட்டியலையும் சமர்ப்பிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  10. எஸ்எஸ்சி ஊழல் வழக்கில் சிக்கிய மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோருக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  11. கொரோனா தொற்று பொதுவாக இங்கே இல்லை என்று நாம் பாசாங்கு செய்ய முடியாது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா மரணம் 35% அதிகரித்துள்ளது. தடுப்பூசி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
  12. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  யாருடனும் கூட்டணி வைக்காது. 224 தொகுதிகளி லும் தனித்துப் போட்டியிட்டு, 130-க்கும் அதிகமான  இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப் போம் என்று உறுதியாக நம்புகிறோம் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார்.
  13. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பு  யூனியன் பிரதேசத்தில் சாதாரணமாக வசிப்பவர்கள்  வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தகுதியுடையவர் களாக இருந்தனர். அவர்கள் நிரந்தர குடியுரிமை பெறாத வாக்காளர்களாக (என்பிஆர்) வகைப்படுத்தப்பட்டனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சுமார் 32,000 என்பிஆர் வாக்காளர்கள் வாக்களித்தனர் என ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அதிகாரிகள் விளக்கம்.
  14. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 3% வாக்கு வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்விக்கு ஓபிஎஸ் தான் காரணம். ஒவ்வொரு முறையும் பிரச்சனை செய்யும் ஓபிஎஸ்-ஐ அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்? என - எடப்பாடி பழனிசாமி கேள்வி.
  15. திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான பவுடர் வடிவிலான தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபரும், பார்சலை வெளியே கடத்த உதவிய விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
;