states

அதிமுகவின் முதல் எம்.பி., மாயத்தேவர் காலமானார்

சென்னை, ஆக. 9- அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் (88) செவ்வாயன்று (ஆக. 9) காலமானார். பெரிய கருப்பத் தேவர்-பெரு மாயி இணையருக்கு 9135ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி  உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் மாயத்தேவர் பிறந்தார். பள்ளிக் கல்வியை பாளையங் கோட்டை தூய சவேரியார் மேனிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு களை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். பின்னர் 1973ஆம் ஆண்டு மே  20ஆம் தேதி திண்டுக்கல் மக்கள வைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில்  போட்டியிட்ட பொன் முத்துராமலிங் கத் தேவருக்கு எதிராக அதிமுக  சார்பில் மாயத்தேவர் நிறுத்தப் பட்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே  நடைபெற்ற அந்த தேர்தலில் அதிமுக  வேட்பாளர் 2.6 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றிருந் தார். ஆளும் கட்சியான திமுக 93  ஆயிரத்துக்கும் சற்று அதிக வாக்கு கள் பெற்று 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது. ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்எஸ்வி சித்தனுக்கு இரண்டாம் இடம் கிடைத் திருந்தது. அந்த வகையில் அதிமுக வுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் மாயத்தேவர். இந்நிலையில் அவர் செவ்வாயன்று (ஆக. 9) கால மானார். அவரது உடல் புதனன்று (ஆக. 10) அடக்கம் செய்யப்பட உள்ளது.

;