states

நைஜீரியாவில் 43 பேர் சுட்டுக்கொலை

சகோடா(நைஜீரியா), அக்.19- நைஜீரியாவில் உள்ள சகோ டா மாகாணத்தில் செவ்வாயன்று அடையாளம் தெரியாத நபர்கள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43  பேர்  கொல்லப்பட்டதாக அந்நா ட்டு அரசு தெரிவித்துள்ளது.  நைஜீரியா நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்கு தல்களும் ஆள் கடத்தலும் அதி கரித்து வருகிறது. இந்த நிலை யில் செவ்வாயன்று சோகோட்  டோ மாகாணத்தில் உள்ள  கொரன்யா எனும் கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரி யாத  நபர்கள் அங்குள்ள சந் தைப் பகுதியில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இந்தத் தாக்குதலில் 43 பேர் பரிதாபமாக பலியாயினர். 43 பேர் கொல்லப்பட்டதை சோகோட்டோ மாவட்ட அரசு  செய்தித் தொடர்பாளர் முஹம் மது பெல்லோ-வும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சனுசி  அபுபக்கரும் உறுதிப்படுத்தி யுள்ளனர். கொள்ளையர்களின் நட வடிக்கைகளை ஒடுக்குவதற் காக  தொலைபேசி சேவைகள் பல வாரங்களாக நிறுத்தப் பட்டுள்ளதால் தகவல்களைப் பெறுவதில் சிரமம் நீடிக்கிறது. அக்டோபர் 8 ஆம் தேதி  ஒரு கிராம சந்தையில் நடை பெற்ற தாக்குதலில்  17 நைஜீரியா பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;