states

img

சிறுமிகள் நள்ளிரவில் ஏன் பீச்சில் தங்க வேண்டும்..? வல்லுறவை நியாயப்படுத்தி பாஜக முதல்வர் பேச்சு....

பனாஜி:
அண்மையில் கோவா மாநிலத்தில் கடலோரம் இரவில் சுற்றிய14 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இரண்டு பேரை அரசு அதிகாரி உட்பட நான்கு பேர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். அத்துடன், சிறுமிகளுடன் வந்த இரண்டு சிறுவர்களையும் அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். 

இந்த விவகாரம் தற்போது கோவா மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளநிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வியாழனன்று கோவா சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.இந்நிலையில், கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய கோவா பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த், “14 வயதுச் சிறுமிகள் இரவு முழுவதும் கடற்கரையில் தங்குகிறார்கள் என்றால், பெற்றோர்கள்தான், அதனை ஏன்? எனக் கண்டறிய வேண்டும். பிள்ளைகள் சொன்னபேச்சு கேட்பதில்லை என்பதற்காகஅரசாங்கத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பழிசுமத்தக் கூடாது; பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது பெற்றோரின் கடமை. சொல்லப்போனால், அந்தச் சிறுமிகள் இரவில் வெளியே சென்றிருக்கவே கூடாது”என்று வல்லுறவை நியாயப்படுத்தும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கோவா மக்களையும் இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

‘இரவில் வெளியே நடமாட நாம் ஏன் பயப்பட வேண்டும்? குற்றவாளிகள் சிறையில் இருப்பார்கள். சட்டத்தை மதிப்பவர்கள் சுதந்திரமாகத்தான் நடமாடுவார்கள்’ என்று கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்அல்டோன் டி காஸ்டா, சாவ ந்திற்கு பதிலடி கொடுள்ளார்.அதேபோல, “சாவந்தின் பேச்சு, கடமையைத் தட்டிக்கழிக்கும் அருவருக்கத்தக்க செயல். இவர்கள் வெட்க மற்றவர்கள்” என சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும், “முதல்வரின் கருத்து அருவருக்கத்தக்கதாக உள்ளது” என கோவா பார்வர்ட் கட்சித் தலைவர் விஜய் சர்தேசாயும் சாடியுள்ளனர்.

;