states

img

கேரள இடதுஜனநாயக முன்னணி அரசின் முன்மாதிரி திட்டம் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் நவம்பர் 1 முதல் ‘இ-ஆட்டோ’ சேவை

கொச்சி, செப்.21- கேரளம் பிறந்த நாளான நவம்பர் 1 முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலை யங்களிலும் ‘இ-ஆட்டோ சேவை’ துவங்கப்படுகிறது. 22 மெட்ரோ நிலையங்களிலிருந் தும் இந்த சேவையை துவக்க கேரள மெட்ரோ ரயில் லிமிடெட் (கேஎம் ஆர்எல்) நிறுவனம் மற்றும் எர்ணா குளம் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டுறவு சங்கம் இடையிலான கூட் டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “நவம்பர் 1 முதல், ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் இரண்டு ‘இ-ஆட்டோ’க்கள் இயங்கும். எதிர் காலத்தில், மெட்ரோவின் தொடக்கப் புள்ளியில் ஆட்டோக்கள் முன்பதிவு செய்யப்படும். மெட்ரோ ரயில் டிக் கெட்டுடன் ஆட்டோ கட்டணத்தையும் செலுத்தலாம். தொடர்ந்து இதுகுறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று  வருகின்றன” என்று கேஎம்ஆர்எல் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், “மெட்ரோ நிலையங்களில் இருந்து செல்லும் மற்ற ஆட்டோக் களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் 50 ஆட்டோக்கள் இப்போது மெட்ரோ ஃபீடர் சேவை யின் ஒரு பகுதியாக இருக்கும். மெட்ரோ நிலையங்களில் ‘மின்சார ஷேர் ஆட்டோக்களும்’ சோதனை அடிப்படையில் இயக்கப்படுகின்றன” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கேஎம்ஆர்எல் நிர்வாக இயக்கு நர் லோக்நாத் பெஹ்ரா, மாவட்ட ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.பி. சியமந்த பத் ரன், செயலாளர் கே.கே. இப்ராகிம் குட்டி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

;