states

img

பாஜகவின் பிளவு அரசியலில் இணைகிறது யுடிஎப்..... மக்கள் நலனை உறுதி செய்வதே எல்டிஎப் நோக்கம்.... து.ராஜா....

கொச்சி:
நாட்டின் பிற பகுதிகளைப் போலவே கேரளத்திலும் பிளவு அரசியலை பாஜக தொடர்கிறது என்றும் யுடிஎப் அதில் இணைகிறது என்றும் சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.

‘புதிய கேரளம் உருவாக்க மீண்டும் எல்டிஎப்’ என்ற முழக்கத்துடன் ஞாயிறன்று எர்ணாகுளத்தில்  தெற்கு கேரளம் தழுவி நடைபெற உள்ள பிரச்சார பயணத்தை து.ராஜா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்டிஎப்அரசாங்கம் படைத்துள்ள  சாதனைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்கு தெரியும். எல்டிஎப் அரசாங்கம் அனைத்து நெருக்கடிகளையும் சமாளித்து மக்களின் நலனை உறுதி செய்துள்ளது. பினராயி விஜயன் அரசாங்கத்தின் கீழ் கேரளம் அனைத்து குறிகாட்டிகளிலும் முதலிடத்தில் உள்ளது.நாட்டில் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும்பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லியில் போராடும் விவசாயிகளைப் பார்க்க நேரமில்லை. விவசாயிகள் தங்களுக்காக மட்டுமல்ல, நாட்டின் நலன்களுக் காகவும் போராடுகிறார்கள். நாட்டில்உள்ள அனைத்து செல்வங்களையும் கோடீஸ்வரர்கள் உருவாக்குகிறார்கள் என்று மோடி நம்புகிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் செல்வம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அவர்கள் தான் பாதுகாக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் மோடி முதலாளிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கிறார்.அரசமைப்பு சாசனத்தின் விழுமியங்களையும் ஜனநாயகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது இந்தநாட்டின் மிகச் சிறப்பு வாய்ந்த நற்பண்பு. இந்தியாவை ஒரு மத தேசமாகமாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. அதை விமர்சிப்பவர்கள் துரோகிகள் ஆக்கப்படுகிறார்கள்.இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக கேரளம் செயல்படுத்தும் மாற்றை முழு இந்தியாவும் பார்த்துக் கொண்டிருக்கிறது. கேரளத்தில் உள்ள பினராயிவிஜயன் தலைமையிலான அரசாங்கம் மத்திய அரசின் வகுப்புவாதநடவடிக்கைகள் மற்றும் தனியார்மய மாக்கல் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கிறது. பாஜக மற்றும் யுடிஎப்பை அம்பலப்படுத்த - இனவெறிக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பது இடதுசாரி இயக்கம்மட்டுமே. இதை மக்கள் மத்தியில் விளக்கும் தெற்கு கேரள எல்டிஎப் பிரச்சார அணிவகுப்பை துவக்கி வைப்பதாக து. ராஜா கூறினார்.

;