states

img

வாகனத்தில் பயணிகளுக்கு உணவு வழங்க கேரளத்தில் ‘இன்-கார் டைனிங்’ திட்டம்....

திருவனந்தபுரம்:
வாகனங்களில் உணவு பரிமாறும் திட்டம் கேடிடிசி உணவகங்களில் விரைவில் தொடங்கப்படும் என்று  கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பயணிகள் கடந்த காலத்தைப்போல சாலையில் பாதுகாப்பாக சாப்பிடமுடியாது. எனவே, கோவிட் விதிமுறை களின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கேடிடிசி உணவகங்களில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். ‘இன்-கார் டைனிங்’ என்கிற பெயரில் இத்திட்டம் செயல்படும். இது கேரளாவின் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்கும். காலை, மதியம்,இரவு வேளை உணவு இங்கு  தயாரித்து வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;