states

img

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயம் கூடாது.... முதல்வர்...

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானியிடம் ஒப்படைக்கும் முடிவிலிருந்து மத்திய அரசு விலக வேண்டும். 

மத்திய அரசு அதற்கான உத்தரவாதத்தை மாநில அரசுக்கு  அளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கல் பிரச்சனையில் மாநில அரசுதலையிட்டது. மத்திய அரசை நியாயப்படுத்த சசிதரூர் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்றும் திருவஞ்சூர் போன்றவர்கள் ஏன் பொறுப்பேற்கிறார்கள் என்றும் முதல்வர் கேட்டார். மத்திய அரசு தவறான நிலைப்பாட்டை எடுத்தால் எதிர்க்கட்சி அதை எதிர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். திருவனந்தபுரம் விமான நிலைய பிரச்சனையில் ஒழுக்கமான மத்தியஅரசாக இருந்தால், நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் மேல் நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று முதல்வர் பேரவையில் தெரிவித்தார்.கரிப்பூர் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு யார் எதிராக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விமானநிலையத்தின் வளர்ச்சி குறித்து பல விவாதங்கள் நடந்தன, அதன் பிறகுதான்  நிலம்ஒதுக்கப்படாதது உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்தன என்று அவர் கூறினார்.

;