states

img

மோடி அரசுக்கு எதிரான போர்முனையாக மாறிய கேரள சட்டப் பேரவை நிறைவு.....இரண்டு சிறப்புக் கூட்டங்களுடன் 232 நாட்கள்....

திருவனந்தபுரம்:
ஏராளமான சட்ட நிர்மாணத்திற்கும் போராட்டங்களுக்கும் வழி வகுத்த14 ஆவது கேரள சட்டப்பேரவைக்கு வெள்ளியன்று திரை விழுந்தது.ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் கொலை செய்யும் மத்தியஅரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான குரல் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஒலித்து வந்தது.

மலையாளிகளின் வலுவான மதச்சார்பற்ற உணர்வும் மாற்றுக் கொள்கைகளும் சட்டமன்றத்தை வலுப்படுத்தின. மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிராக 14 தீர்மானங்களை பேரவை நிறைவேற்றியது. இதற்காக இரண்டு முறை சிறப்புக் கூட்டங்கள் கூட்டப்பட்டன. கடைசி கூட்டத்தின் நாளான வெள்ளியன்றும் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் முன்னணியான எல்டிஎப், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போர்க்களமாக பேரவையை மாற்றியது. எதிர்க்கட்சியின் குரல்கள் பெரும்பாலும் பலவீனமடைந்தன. எதிர்கட்சி முன்னணியான யுடிஎப்மென்மையாக பாஜக-வை அணுகுவதேஇதற்குக் காரணம். பாஜகவை குற்றப்படுத்த பெரும்பாலான தருணங்களில் எதிர்கட்சி தலைவர் உட்பட தயக்கம் காட்டினர். ஆனால், முதல்வர் பினராயி விஜயனும் அவர் தலைமையிலான ஆளும் முன்னணியினரும், மத்திய அரசு மீதும், அரசை வழிநடத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீதும் குற்றச்சாட்டுகளை சரமாரியாக பொழிந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம், கும்பல் படுகொலைச் சட்டம், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் திருத்தச் சட்டம் மீதான போராட்டம் இதற்கு சான்று. மத்திய அரசின்வேளாண் எதிர்ப்பு, கூட்டுறவு, வெளிநாடு வாழ்வோர் மற்றும் பொதுத்துறை விரோத நிலைப்பாடுகளுக்கு எதிராக கேரளாவின் எதிர்ப்பு பேரவையில் உரத்து ஒலித்தது.

கடந்த சில மாதங்களாக, மாநில அரசை அகற்றுவதற்காக வட்டமிட்டு வரும் மத்திய நிறுவனங்களுக்கு எதிராகபேரவை எச்சரிக்கை விடுத்து வந்தது. கேரள அரசின் உட்கட்டமைப்பு நிதி வாரியத்தை (கிப்பி) அகற்றுவதற்கான மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) நடவடிக்கைக்கு எதிராக வெள்ளியன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதற்கு சான்று.

வேளாண் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் மீதான தடை, கூட்டுறவு வங்கி வைப்புத்தொகை மீதான வருமான வரி, வெளிநாட்டினருக்கு வருமான வரி, தேசிய கல்வி கொள்கை, ஆர்சிஇபி ஒப்பந்தம், விவசாய நில பாதுகாப்பு திருத்தம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தில் திருத்தம், இந்துஸ்தான் செய்தித்தாள் விற்பனை மற்றும் மக்களவையில் இருந்து ஆங்கிலோ இந்திய பிரதிநிதிகளை விலக்குதல். கோவிட் காலத்தில்வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரின்விமானப் பயணம், கர்நாடகாவில் இரவுபயணத்திற்கு தடை, ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்குவது குறித்தும் இந்த தீர்மானங்கள் வலியுறுத்தின. சங்க பரிவாரின் கும்பல் படுகொலைக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

குருவின் நினைவாக..
ஸ்ரீ நாராயண குருவின் நினைவை பதியவைத்து பதினான்காவது கேரள சட்டப்பேரவை வெள்ளியன்று (ஜன.22) கலைக்கப்பட்டது. புதிய சகாப்தத்தை உருவாக்கும் ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலை பல்கலைக்கழக மசோதாவை நிறைவேற்றியது. பேரவைத் தலைவரை நீக்குவதற்கான அவசர தீர்மானம் குறித்து விவாதிக்கவும் பேரவை கூடியது. இந்த காலத்தில் பேரவையில் பல உயர் தொழில்நுட்ப திட்டங்கள் தொடங்கப்பட்டன.  

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் கூட்டம் ஜூன் 2, 2016 அன்று தொடங்கியது. இது 22 கூட்டத் தொடர்களில் 232 நாட்களை சந்தித்தது. 11,344 கேள்விகள் அங்கீகரிக்கப்பட்டன. 72,482 கேள்விகள் அச்சிடப்பட்டுள்ளன. ஏழு அவசர கேள்விகள்அனுமதிக்கப்பட்டன. 2072 சமர்ப்பிப்புகளும் (சப்மிஷன்) அனுமதிக்கப்பட்டன.213 அதிகாரப்பூர்வ மசோதாக்கள், 62 அதிகாரப்பூர்வமற்ற மசோதாக்கள் உட்பட 275 மசோதாக்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் 87 அரசு மசோதாக்கள் மற்றும் 22 ஒதுக்கீட்டு மசோதாக்கள் உட்பட 109 சட்டங்கள் இயற்றப்பட்டன. உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி(திருத்தம்) மசோதா, கேரள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, கேரள மலையாள மொழி (கட்டாய மொழி) மசோதா, கேரள கடல் வாரிய மசோதா, கேரள மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) மசோதா, கேரள கூட்டுறவு மருத்துவமனை வளாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் (மற்றும் கையகப்படுத்தல்) மைக்ரோ மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன வசதிமசோதா, கேரள மதரசா ஆசிரியர்கள் நல நிதி மசோதா, கேரள கிறிஸ்தவகல்லறைகள் (அடக்கம் செய்வதற்கானஉரிமை) மசோதா மற்றும் ஸ்ரீநாராயணகுரு திறந்த பல்கலைக்கழக மசோதா ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கேரள கடல் வாரிய மசோதா, 2014 திரும்பப் பெறப்பட்டது.   

பேரவை நிறைவேற்றிய கேரளதொழில்முறை கல்லூரிகள் (மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கை ஒழுங்குபடுத்துதல்) மசோதா-2018 க்கு ஆளுநர்அனுமதி மறுத்தார். இரண்டு சட்டரீதியான தீர்மானங்களும் 20 அரசு முறையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கும் பேரவை வாக்களித்து தள்ளுபடி செய்தது. பேரவைத் தலைவரை நீக்கக் கோரும் மற்றொரு தீர்மானம் பெரும்பான்மை இல்லாததால்பேரவை மட்டத்தில் தோற்கடிக்கப்பட்டது. புதிய நிதியாண்டு துவங்குவதற்கு முன்னர் மாநில நிதிநிலை அறிக்கையை முழுமையாக நிறைவேற்ற முடிந்தது.

;