நெருக்கடிகளையும் இடர்பாடுகளையும் கடந்து புதிய கேரளத்தை உருவாக்கும் உறுதியான நடவடிக்கையாக கேரள பட்ஜெட் அமைந்துள்ளது. வேகமாக நவீனமயமாகி வரும் கேரளத்தின் முன்னோக்கிய பயணத்திற்கான விரிவான திட்டத்தை இந்த பட்ஜெட் முன்வைக்கிறது.
ஒன்றிய அரசின் குரோத அணுகுமுறையால் மாநிலம் நெருக்கடியில் சிக்கினாலும், வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளில் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய யுகத்தின் சவால்களை சமாளிக்க மாநிலத்தின் முழு திறனையும் பயன்படுத்தவும், மாறுபட்ட, வேகமான வழிமுறைகளை பின்பற்றவும் பட்ஜெட் முயற்சிக்கிறது. நாட்டிற்குத் தகுதியானதை அடைய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் பட்ஜெட் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
- பினராயி விஜயன், கேரள முதல்வர் -