states

img

தெற்காசியாவின் மையமாக பாலின பூங்கா... கேரள முதல்வர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்....

கோழிக்கோடு;
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரத்தை நோக்கமாக கொண்டு மாநில அரசு அமைத்துள்ள கோழிக்கோடு வெல்லிமட்குன்னில் உள்ள பாலின பூங்காவை கேரள முதல்வர் பினராயி விஜயன்ஞாயிறன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தெற்காசியாவிலேயே பாலின சமத்துவத்திற்காக செயல்படும் அனைத்து அமைப்புகளின் மையமாக இந்த பூங்கா மாறும் என கருதப்படுகிறது.விழாவில் பேசிய முதல்வர், பாலின பூங்கா என்பது நாடும் உலகமும் உற்றுநோக்கும் கேரள அரசின் ஒரு முன்முயற்சிநிறுவனமாகும். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இதை செயல்படுத்துவதில் பெருமைப்படுவதாக அவர் கூறினார். விழாவிற்கு அமைச்சர் கே.கே.ஷைலஜா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் டி.பி.ராமகிருஷ்ணன், ஏ.கே.சசிந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இப்பூங்காவில் பாலின அருங்காட்சியகம், நூலகம், மாநாட்டு மையம், ஆம்பி தியேட்டர்ஆகியவை திறக்கப்பட்டன. பெண் தொழில்முனைவோருக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலையும் சந்தையையும் உருவாக்குவதற்கான சர்வதேச மகளிர் வர்த்தக மையத்திற்கான அடிக்கல்லையும் முதல்வர் நாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியான ஐ.நா.பெண்களுக்கான சமவாய்ப்பு நிறுவனத்துடன் ஒத்துழைக்க, பாலின பூங்கா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாலின சமத்துவம் குறித்த சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெளியிடப்பட்ட கருப்பொருள்களின் பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் பதிப்புகள் பாலின நூலகத்தில் கிடைக்கின்றன.வரலாற்றுக்கு முந்தைய காலங்களி லிருந்து பெண்கள் சமுதாயத்தின் பரிணாமவளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள், பெண்கள் மறுமலர்ச்சி இயக்கங்கள் மற்றும் கேரளாவின் போராட்டங்களை இந்த அருங்காட்சியகம் உள்ளடக்கியுள்ளது. மகளிர் வர்த்தக மையம், UNWomen உடன் இணைந்து, பெண் தொழில்முனைவோருக்கு சர்வதேச வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகளையும் வழங்குகிறது.

;