states

img

அறிவியல் தொழில்நுட்பம் வேலைவாய்ப்பை பாதிக்கக் கூடாது... சிபிஎம் தலைவர் கே.என்.பாலகோபால் பேச்சு

திருவனந்தபுரம்:
“அறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சமூகம் நம்முடையது, அதே நேரத்தில் அறிவின் பரவல் வேலைவாய்ப்பை பாதிக்கக் கூடாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் கே.என். பாலகோபால் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:“கடின உழைப்பின் மூலம் தகவல்கள் வந்தடைந்தன. ஆனால் உழைப்பு குறைவான அளவே போதுமானது என்கிற இடத்திற்கு விஷயங்கள் தற்போது வந்து விட்டன.அறிவுச் சமூகத்தின் திறனை நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், வேலையின்மை உள்ளிட்ட இதன் மறுபக்கங்களும் புரிந்து கொள்ளப் பட வேண்டும். அறிவின் பரவல் வேலைவாய்ப்பை பாதிக்கக்கூடாது. அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்பட வேண் டும்.மனிதாபிமானம் கொண்ட வளர்ச்சித் திட்டமே நமக்குத் தேவை. ஆராய்ச்சிகள் வேண்டும். அது தயாரிப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும். கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு மீண்டும் ஆட்சிக்குவந்தால், இதற்கேற்ப உயர் கல்வித்துறையில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப் படும்.” இவ்வாறு பாலகோபால் தெரிவித் துள்ளார்.

;