states

img

கேரளத்தில் ஓண கிட் ஜுலை 31 முதல் விநியோகம்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சிறப்பு ஓண கிட் விநியோகம் 31 ஆம் தேதி தொடங்கும் என்று கேரள உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் அடங்கிய பைகள் (கிட்) அனைத்து வகைஅட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.ஏஏஒய் (மஞ்சள்) வகைக்கு ஆகஸ்ட் 31 மற்றும் ஆகஸ்ட் 3, பிஏஎச் (இளஞ்சிவப்பு) வகைக்கு ஆகஸ்ட் 4 முதல் 7 வரை, என்பிஎஸ் (நீலம்) வகைக்கு ஆகஸ்ட் 9 முதல் 12 வரையிலும், என்பிஎன்எஸ் (வெள்ளை) வகைக்கு ஆகஸ்ட் 13 முதல் 16 வரை விநியோகிக்கப்படும்.சிறப்பு கிட்டில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து தயாரிப்புகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. ஜூன் மாதத்திற்கான இலவச உணவுகிட்டுகளின் விநியோகம் 28 ஆம் தேதியுடன்நிறைவடையும்.

;