states

img

கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி பிரச்சார பயணங்கள் நிறைவு....

திருவனந்தபுரம்:
கேரளத்தின் வளர்ச்சியின் முன்னேற்றங்களை மக்களுக்கு விளக்கிய வடக்கு தெற்கு இஜமு பிரச்சார பயணங்கள் ஆட்சித் தொடர்ச்சியை மக்கள் மத்தியில் விவாதமாக்கி வெள்ளியன்று (பிப்.27) நிறைவு பெற்றன.

திருவனந்தபுரத்தில் உள்ள புத்தரிகண்டம், திரிசூரில் உள்ள தேக்கின்காடு மைதானத்தில் நிறைவடைந்த பேரணி - பொதுக்கூட்டங்களைத் தேடி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் வந்த தேர்தல் அறிவிப்பும் வந்தது. இது வெற்றியை மேலும் அதிகரிப்பதற்கான உற்சாகத்தை அளித்தது. கேரளத்தில் முதன்முறையாக, ஆட்சியின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தி தனித்துவமான வரலாற்றைப் படைக்க கேரளம் தயாராகிவருகிறது. வரும் நாட்களில் ஊழியர்
களை அதற்கு அணிதிரட்டுவதற்கான அறைகூவலுடன் பிரச்சார பயணங்கள் நிறைவடைந்தன.

வளர்ச்சியை குறைமதிப்பு செய்து எதிர்க்கட்சி நடத்திய பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை திரண்ட மக்கள் பறைசாற்றினர். நூறுக்கும் மேற்பட்ட மையங்களில் இரண்டு பிரச்சார பயணங்களையும் வரவேற்க பல்லாயிரக்கணக்கானோர் வந்தனர். இஜமு தலைவர்கள் ஐந்து ஆண்டு ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டு அணிவகுப்புக்கு தலைமை தாங்கினர். ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அபிவிருத்தி மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகள் தாங்கள் கண்ட- அனுபவித்த ஒருஉண்மை என்பதை மக்கள் உறுதிப்படுத்தினர். எப்போதும்  இல்லாத நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் கூட நாட்டை மன உறுதியுடன் வழிநடத்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியே எல்லா இடங்களிலும் மக்களின் நம்பிக்கை. வளர்ச்சி அணிவகுப்பு மக்கள் அரசைக் கவிழ்க்கும் சதித்திட்டங்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுவதாக இருந்தது.

சிபிஐ தேசிய செயலாளர் பினாய் விஸ்வம் எம்.பி தலைமையிலான தெற்கு பகுதி பயணத்தின் நிறைவு அமர்வை முதல்வர் பினராயி விஜயன் புத்தரிக்கண்டம் நாயனார் பூங்காவில் தொடங்கி வைத்தார். சிபிஎம் மாநிலபொறுப்பு செயலாளர் ஏ. விஜயராகவன்தலைமையிலான வடக்கு பகுதி பிரச்சார பயணம் திருச்சூரில் உள்ள தேக்கின்காடு மைதானத்தில் நிறைவடைந்தது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சிபிஐ மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

;