states

img

மாநிலங்களவைக்கான இஜமு வேட்பாளர்கள் டாக்டர் வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ்....

திருவனந்தபுரம்:
சிபிஎம் கேரள மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன், கைரளி நியூஸ் நிர்வாக இயக்குநர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் மாநிலங்களவைக்கான இஜமு பிரதிநிதிகளாக போட்டியிடுவார்கள் என்று சிபிஎம் மாநில செயலாளர் ஏ. விஜயராகவன் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: 

கடந்த ஐந்து ஆண்டுகளாக இடதுசாரி அரசாங்கத்தின் நல்லாட்சி பரவலாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இடதுஜனநாயக முன்னணி மதிப்பீடு செய்துள் ளது. தேர்தல்களின் போது கேரளாவின் பொது முன்னேற்றத்தை நோக்கி அரசாங்கம் செய்த நல்ல பணிகள் குறித்து ஐஜமுஎதிர்மறையான கருத்தை முன்வைத்தது. முதல்வர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மக்கள் அவற்றை நிராகரிப்பார்கள். ஐஜமுன்னணியின் தவறான பிரச்சாரத்தை பாஜக தொடர்கிறது என்பதுதான் தேர்தல் காலத்தில் பொதுவான போக்காக இருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இதையே மத்திய இணைஅமைச்சர் வி. முரளீதரனும் செய்கிறார்.எதிர்க்கட்சித் தலைவரும், மத்திய அமைச் சரும் தொடர்ந்து முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிறார்கள். அவர்கள் வகிக்கும் பதவியின் மதிப்பு அறிக்கைகளில் பிரதிபலிக்கவில்லை. கோவிட் பாதுகாப்பு பிரச்சாரத்தை அதிகப்படுத்த ஆர்வலர்கள் தலையிட வேண்டும். கேரளத்துக்கு அதிகமான தடுப்பூசிகளை அனுமதிக்க வேண்டும் என்று இடதுமுன்னணி கோருவதாகவும் விஜயராகவன் விளக்கினார்.செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜயராகவன், இதற்கு முன்பும் ஊடகங்களின் பிரதிநிதிகள் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதன் வெளிச்சத்தில் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து ஊழியர்களும் மதிப்பீடு செய்யப்பட்டுஅவர்களில் இருவர் மாநிலங்களவைக் கான உறுப்பினர் தேர்வுக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். இது அவர்களின் திறனையும் வலிமையையும் ஆராய்ந்த பின்னர் கட்சிமேற்கொண்ட முடிவு என்றும் விஜயராகவன் தெரிவித்தார்.

;