states

img

மின் இழை விளக்கு இல்லா கேரளம்..... திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்....

திருவனந்தபுரம்:
மின் இழை இல்லாத கேரளா திட்டத்தை மாநில அளவில் முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். வீடுகளிலுள்ள சாதாரண இழை விளக்குகளை மாற்றுவதற்கும், எல்ஈடி விளக்குகளை மலிவான விலையில் வழங்குவதற்குமான திட்டமாகும்.

இது மின் நுகர்வு மற்றும் செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்று முதல்வர் கூறினார். திட்டம் நிறைவடைந்ததும், 100 முதல்150 மெகாவாட் மின்சாரம் சேமிப்பாகும். இது கேஎஸ்இபியின் மின் கொள்முதல் செலவு குறையும்.எல்ஈடி விளக்குகள் மூன்று ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது. ரூ.100 க்கு மேல் உள்ளவிளக்குகள் ரூ .65 க்கு வழங்கப்படும். உத்தரவாத காலத்தில் சேதம் ஏற்பட்டால், அது மாற்றப்படும். விளக்கின் விலையை மின்சாரகட்டணத்துடன் அல்லது தவணைகளில் செலுத்தலாம். கேஎஸ்இபியின் வலை இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு இந்த விளக்கு வழங்கப்படுகிறது. தற்போது 17 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவற்றை வழங்க 1 கோடி விளக்குகள்தேவை. பதிவு செய்யாதவர்களுக்கு பதிவு செய்ய வாய்ப்புவழங்கப்படும். இத்திட்டத்தை அதிகபட்சமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

சுற்றுச்சூழல் நட்பு திட்டத்தை கேஎஸ்இபி மற்றும் எரிசக்தி மேலாண்மை மையம் செயல்படுத்தி வருகிறது. கேஎஸ்இபி திரும்ப பெறும் இழை விளக்குகள் கிளீன் கேரளா நிறுவனத்திற்கு வழங்கப்படும். அவர்கள் அதை அறிவியல் பூர்வமாக கையாள்வார்கள். இழை விளக்கு இல்லா கேரளா திட்டம் புவி வெப்பமடைதலைத் தடுக்க கேரளா முன்வைத்த மாற்றுதலையீடு என்று முதல்வர்கூறினார். தெரு விளக்குகளை முழு எல்ஈடி ஆக மாற்றும் ‘நிலவ்’ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.16 லட்சம் தெருவிளக்குகளில், 5.5 லட்சம் ஏற்கனவேஎல்ஈடி க்கு மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 10.5 லட்சத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முதல் கட்டத்தில், இரண்டு லட்சம் விளக்குகள் மாற்றப்படும். மீதமுள்ளவை அடுத்த கட்டத்தில் மாற்றப்படும். நான்கரைஆண்டுகளில், மின் உற்பத்தி,விநியோகம் மற்றும் பரிமாற்றத்தில் அரசாங்கம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதை அங்கீகரிக்கும் விதமாக தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதை கேரளம் பெற்றுள்ளது என்று முதல்வர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏ.சி மொய்தீன், கேஎஸ்இபி தலைவர் என்.எஸ். பிள்ளை, இயக்குநர் டாக்டர் வி. சிவதாசன் ஆகியோர் பேசினர்.

;