states

img

காசர்கோடு பெல் : கேரள அரசு ஏற்பு.....

திருவனந்தபுரம்:
மத்திய அரசால் விற்பனைக்கு விடப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பிஎச்இஎல் (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) கேரள அரசு நிறுவனமானது. பெல்-இஎம்எல்  (எல்க்ட்ரிக்கல் மிஷன் லிமிட்டெட்) கூட்டு நிறுவனத்தில் 51 சதவிகித பங்குகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கேரளத்தின் கோரிக்கையை பெல் ஒப்புக்கொண்டு அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

இது தொடர்பாக தொழில் துறை முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதத்தை பெல் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கேரளத்தின் கோரிக்கையை மத்திய கனிம கைத்தொழில் அமைச்சகம் ஏற்றுக் கொண்டதாகவும், மாநில அரசுக்கும்,பிஹெச்எல்எல் நிறுவனத்துக்கும் இடையிலான விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2016 இல் மத்திய அரசால் கைவிடப்பட்ட BHEL - EML ஐ கையகப்படுத்த எல்டிஎப் அரசு 2017 இல் முடிவு செய்திருந்தது. இந்த நோக்கத்திற்காக, பிஹெச்எல் உடன் விவாதிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது, அக்குழு திட்டத்தை ஏற்றுக்கொண்டு நிறுவனத்தின் பொறுப்பேற்க முடிவு செய்யப் பட்டது. மாநில அரசுக்கு மாற்றுவதில் எந்த தடையும் இல்லை என தெரிவித்த போதிலும், பரிமாற்ற ஆவணத்தை வழங்க மறுப்பதாக மத்திய அரசின் நிலைபாடு இருந்தது. இது தொடர்பாக மாநில அரசு பலமுறை தலையிட்டு மத்திய அமைச்சரை பலமுறை சந்தித்தது.

பெல் மற்றும் கேரள அரசு இடையே ஒரு கூட்டு முயற்சி யாக 2010 இல் BHEL-EML உருவாக்கப்பட்டது. பெல் நிறுவனத்திற்கு 51 சதவிகித பங்குகளும், கேரள அரசுக்கு 49 சதவீத பங்குகளும் உள்ளன. பெல் நிறுவனத்தை கூட்டு முயற்சியில் இருந்து விலக்கி, பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சூழ்நிலையில் பங்குகளை வாங்கி நிறுவனத்தை முன்னோக்கி நகர்த்த கேரள அரசு முடிவு செய்தது. மத்திய அரசால் விற்பனைக்கு வைக்கப்பட்ட மற்றொரு பொதுத்துறை நிறுவனமான கோட்டயம் எச்என்எல் (இந்துஸ்தான் நியூஸ் பிரின்ட் லிமிட்டெட்) நிறுவனத்தையும் கேரள அரசு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

;