states

img

ஐ.டி. ஊழியர்களுக்கு நல வாரியம்... கேரள அரசின் முடிவுக்கு வரவேற்பு....

திருவனந்தபுரம்:
தகவல் தொழில்நுட்ப(ஐடி) ஊழியர்களுக்காக நல வாரியம் அமைக்கும் முடிவுக்கு ஐடி ஊழியர்களின் அமைப்பான பிரதிதானி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது கேரளாவில் உள்ள 1.5 லட்சம் தகவல்தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு அதிக நம்பிக்கையையும் வாழ்க்கைப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதிதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2016 ஆம் ஆண்டு முதல், தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர் நல அமைப்பான பிரதிதானி, குறிப்பாக ஐடி ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒரு நல வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வருகிறது. ஐடி ஊழியர்களுக்கான ஒரு நல நிதியம் அமைக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. தற்போது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நல வாரியத்தில் ஐ டி ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவிட் காலத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐடி ஊழியர்கள் தற்போதுள்ள நல வாரியத்திடமிருந்து பல சலுகைகளைப் பெற்றனர். அந்த நிவாரணம் நல வாரிய பிரச்சாரத்திற்கான உந்துதலை அளித்தது. புதிய நல வாரியம் அமைக்கப்படுவதன் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சாதகமான முறையில் ஈவுத்தொகை மற்றும் பணியாளர் நலன்களை அதிகரிக்க முடியும். அதே நேரத்தில், ஓய்வூதியம் மற்றும் வேலை காப்பீடு போன்ற புதிய விசயங்களை நல வாரியம் மூலம் செயல்படுத்த முடியும்.தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரான முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, ஒரு சிறப்பு நல வாரியத்தின் அவசியத்தை அவருக்கு உணர்த்தியதுடன்  மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது. டி.வி.ராஜேஷ் எம்எல்ஏ இந்த கோரிக்கையைஇளைஞர் நல சட்டமன்ற குழு முன் வைத்தார். எம்.ஸ்வராஜ் எம்எல்ஏ-வின் சமர்ப்பிப்பின் எதிரொலியாக எங்களது கோரிக்கை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

2019 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு  கூட்டத்தில் முக்கிய கோரிக்கை நல வாரியமும் பாதுகாப்புமாகும். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அனுதாபத்துடன் அதை பரிசீலிப்பதாக முதல்வர் கூறினார். உறுதிமொழியை அமல்படுத்திய முதல்வர் பினராயி விஜயனுக்கும் அரசாங்கத்துக்கும் பிரதிதானி நன்றி தெரிவித்துக்கொள்கிறது. நலவாரியத்தின் கோரிக்கையுடன் பிரதிதானிக்கு ஆதரவாக நின்ற தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் பிரதிதானி நன்றி தெரிவித்துள்ளது.

                                        ****************

அமைச்சரவை முடிவு
ஐ.டி மற்றும் ஐ.டி தொடர்பான தொழிலாளர்களின் நலனுக்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொழிலாளர் நல வாரியம் நடத்தும். இந்த திட்டம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மகப்பேறு நன்மை, திருமண நன்மை, மருத்துவ உதவி, கல்வி உதவி மற்றும் மரணத்திற்குப் பிந்தைய நன்மை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.10-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட ஐ.டி தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். ஐ.டி தொடர்பான இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாநிலத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நல நிதியின் கீழ் உள்ளனர். 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே உறுப்பினராக தகுதியாகும்.

;