states

img

வரதட்சணை விஷயத்தில் தயவு தாட்சண்யம் கிடையாது... சட்டப்பேரவையில் பினராயி விஜயன் பேச்சு....

திருவனந்தபுரம்:
கேரளத்தில், விஸ்மயா, ஆதிரா, அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்ட 7 பெண்கள்வரதட்சணைக் கொடுமை காரணமாக அடுத்தடுத்து தங்களின் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக அவசரச் சட்டத்தை மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு கொண்டு வந்துள்ளது. 

புதிய சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான குற்றம் என்று அறிவிக்கப்பட்டு, அவ்வாறுவரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் கண்டறியப்பட்டால் அதற்கு 5 ஆண்டுசிறைத் தண்டனை உறுதி செய்யப்பட் டுள்ளது.குறிப்பாக, அரசு ஊழியர்கள் தங்களது திருமணத்திற்குப் பின்பு ‘நான் எந்த வழியிலும் வரதட்சணை பெறவில்லை’ என தனது தந்தை, மனைவி மற்றும் மாமனார் ஆகியோரின் கையொப்பங்கள் அடங்கிய உறுதிமொழிப் பத்திரத்தை சம்பந்தப்பட்டத் துறையின் கண்காணிப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 26-ஆம் தேதி வரதட்சணைத் தடுப்புத் தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் பேசியிருக்கும் முதல்வர் பினராயி விஜயன், வரதட்சணைக்கு எதிரானஅரசின் நிலைபாட்டை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார்.கேரள மாநிலத்தில் பல இடங்களில் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் அதிக அளவில் பதிவாகி வருவதை நான்அறிந்தேன். 2011 முதல் 2016-ஆம்ஆண்டு வரை வரதட்சணைக் கொடுமைகாரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2016-ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான காலத்தில் குறைந் துள்ளது. இந்த காலகட்டத்தில் 54 பேர்வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். 2020, 2021-ம்ஆண்டுகளில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரதட்சணைக் கொடுமைவழக்குகளில் சிக்கியவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. வரதட்சணை ஒரு சமூக அச்சுறுத்தல். எனவே, வரதட்சணைக் கொடுமை வழக்குகள் தொடுக்கப்படும் நபர்கள் மீது தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டோம்” என்றுபினராயி விஜயன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

;