states

img

உணவு தேவைப்படுவோரைக் கண்டறிந்து வீடுகளில் வழங்கப்படும்..... பினராயி விஜயன்.....

திருவனந்தபுரம்:
உணவு தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு அவர்களது வீடுகளுக்கு வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் இயங்கும் ஜனகீய ஓட்டல்களிலிருந்து அவர்கள் உணவைப் பெறலாம்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஜனகீய ஓட்டல் இல்லாத இடங்களில் உணவு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை தெரிந்துகொண்டு சமூக சமையலறைகளை அமைத்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உணவுவழங்கும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  ஓட்டல்களில் பார்சல்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் கூறினார்.மேலும் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் பிற நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். நோய்வாய்ப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்குச் செல்லும் வார்டு மட்டக் குழு உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். வார்டு தலைமைக் குழு உறுப்பினர்களுக்கு வார்டில் பயணம் செய்ய பாஸ் வழங்கப்படும் என்றும் அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

;