states

img

இறைச்சி சாப்பிடுபவர்களை நான் விரும்புவதில்லை... பாஜக கேரள ‘முதல்வர்’ வேட்பாளர் இ. ஸ்ரீதரன் சொல்கிறார்...

திருவனந்தபுரம்:
தன்னைத்தானே பாஜக-வினர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக்கொண்ட ‘மெட்ரோ மேன்’ இ.ஸ்ரீதரன், இறைச்சி சாப்பிடுபவர்களையே தனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.

தான் ஒரு சைவ உணவு உண்பவர் என்றும், முட்டை கூட சாப்பிடுவதில்லை என்றும் என்டிடிவி-க்கு பேட்டி அளித்துள்ளார். அதேபோல பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், பாஜக ஒரு வகுப்புவாத கட்சி அல்ல, அது தேசபக்தி கொண்ட கட்சி என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநராக விரும்பவில்லை எனவும் கேரளத்தில் முதல்வர் ஆவதற்கு தயாராக உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.“கேரளாவில் லவ் ஜிஹாத் உள்ளது. இங்கே, இந்து பெண்கள் திருமணத்திற்காக ஏமாற்றப்படுகிறார்கள்.‘எனக்கு வாஜ்பாயுடன் நல்ல நட்பு இருந்தது. நரேந்திர மோடியுடனும் நெருங்கிய உறவு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.“நான் கட்சியில் சேர்ந்தால் பாஜக-வின் வாக்கு இரட்டிப்பாகும்; மக்கள் பாஜகவுக்கு வருவார்கள்” என்றும் அவர் மற்றொரு பேட்டியில் கூறியுள்ளார்.எல்டிஎப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது ஒரு பேரழிவாக இருக்கும் என்று சாபம் விட்டுள்ள அதேநேரத்தில், உம்மன் சாண்டி முதல்வராக வந்தால் மகிழ்ச்சி அடைவதாகவும், ரமேஷ் சென்னித்தலா மற்றும் குஞ்ஞாலிக்குட்டி ஆகியோர் மரியாதைக்குரியவர்கள் என்றும் முதல்வர் பினராயி விஜயன் ஒரு சர்வாதிகாரி என்றும் தெரிவித்துள்ளார்.

இ.ஸ்ரீதரனின் காமெடி: பினாய் விஸ்வம்
இ.ஸ்ரீதரனின் பேட்டிக்கு சிபிஎம் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் பினாய் விஸ்வம் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “பிரபல பொறியாளர் இ.ஸ்ரீதரன் போன்ற புத்திசாலி மனிதனுக்கு இத்தகைய மாயை ஏற்பட்டால் பாஜகவின் நிலை என்னவாக இருக்கும்? அவர் காலையில் ஆளுநராக மாட்டேன் என்று கூறினார்; மாலையில் கேரள முதல்வராக வருவேன் என்று கூறுகிறார். ஸ்ரீதரன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறார். அவர் கூறுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. ஊழலுக்கு எதிரானவர் என்று கூறிக்கொள்ளும் அவர் சேர்ந்துள்ளது ஊழல் கட்சியில் என்பதை மறந்து விட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;